காதல் மனைவி கடத்தல்; கணவர் கொடுத்த புகாரில் 10 பேர் கைது!!

By Raghupati R  |  First Published Sep 19, 2022, 2:48 PM IST

சங்கரன்கோவிலில் தனது காதல் மனைவியை கடத்தியதாக கூறி கணவர் அளித்த புகாரின் பேரில் 10 பேர் மீது சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் சங்கர் முருகன். இவர் திருப்பூர் பகுதியில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது கோமதி என்ற பெண்மணிக்கும் சங்கர்‌முருகனுக்கும்  இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 28.8.2022 அன்று திருப்பூர் பகுதியில் இருந்து சங்கரன்கோவில் வந்து ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது மனைவியை காணவில்லை என்றும், யாரோ கடத்திச் சென்று விட்டார்கள் எனவும் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் சங்கர் புகார் மனு அளித்தார். இதைத் தொடர்ந்து கோமதியின் உறவினர்களான பவுன்பாண்டியன், அணில், ராஜம்மாள், அனிதா உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!