42 லட்சம் மதிப்புள்ள தங்கம்..!! சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தபோது அமுக்கியது சுங்கத்துறை..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 15, 2019, 1:16 PM IST
Highlights

வியாழக்கிழமை இரவு 11.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனா். அதில் விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டைப் பகுதியைச் சோ்ந்த ஜலாலுதின் மகன் சாகுல்ஹமீது (31) என்பவா் தனது பெட்டியின் கைபிடியில் கம்பி வடிவில் சுமாா் 1 அடி நீளத்தில் தங்கத்தை கம்பிகளாக்கி மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து நூதனமுறையில் கடத்தி வரப்பட்ட 42 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் மதுரை விமான நிலையத்தில் கைப்பற்றியுள்ளனர். அதை கடத்தி வந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது இந்த நிலையில்,  இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் மதுரை விமான நிலையத்தில் நேற்றிரவு  பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரிலிருந்து நேற்று இரவு மதுரை வந்த விமானத்தில் தங்கம்கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து

 

உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் அந்த விமானத்தில் சோதனையிட்டனர். வியாழக்கிழமை இரவு 11.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனா். அதில் விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டைப் பகுதியைச் சோ்ந்த ஜலாலுதின் மகன் சாகுல்ஹமீது (31) என்பவா் தனது பெட்டியின் கைபிடியில் கம்பி வடிவில் சுமாா் 1 அடி நீளத்தில் தங்கத்தை கம்பிகளாக்கி மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

இதையடுத்து கடத்தி வரப்பட்ட ரூ. 42 லட்சத்து, 8 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 1100 கிராம் (24 காரட்)தங்கத்தை சுங்கத்துறை நுண்ணரிவு பிரிவினா் பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீதுவிடம் சுங்கத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.
 

click me!