சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி..! நகை வியாபாரியிடம் பல லட்சங்களை ஏமாற்றி கும்பல்

By Ajmal Khan  |  First Published Oct 16, 2022, 2:57 PM IST

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நகை வியாபாரி ஒருவர் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் சதிகார கும்பலிடம் 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், இழந்த பணத்தை மீட்டுத் தரவும் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  புகார் கொடுத்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


சதுரங்க பட பாணியில் மோசடி

தமிழ் திரைப்படமான சதுரங்க வேட்டை திரைப்படத்தில் கோயில் கலசங்களை விற்பது போல் மோசடி செய்யும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும் அதே போல நெல்லை மாவட்டத்தில் கோயில் கலசத்தில் உள்ள இரிடியம் விற்பனை செய்து பல ஆயிரம் கோடி கிடைத்துள்ளதாக கூறி நகை வியாபாரியை ஏமாற்றிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை மணலி விளை சுந்தர விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் நகை வியாபாரி நாகராஜன். நகை வியாபாரி நாகராஜனுக்கு திசையன்விளை அருகே உள்ள உபகாரமாதா புரத்தில் உள்ள  நாக தேவதை சித்தர் பீடம் மற்றும் அறக்கட்டளை வைத்து நடத்திவரும் பா. இசக்கிமுத்து என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

நகை வியாபாரி நாகராஜனிடம் அறக்கட்டளை நிர்வாகி இசக்கிமுத்து மதுரையைச் சேர்ந்த பாஸ்டர் ஏ பி ராஜ் என்பவருடன் தனக்கு நெருங்கிய பழக்கம் உள்ளதாகவும் அவரிடம் இரிடியம் என்னும் விலை மதிக்க முடியாத பொருள் உள்ளதாகவும் அந்த பொருளை விற்று அதில் வரும் 2000 கோடி ரூபாய் பணத்தை தனது அறக்கட்டளையில் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அறக்கட்டளைக்கு வரும் பணத்தை நாகராஜனை போன்ற பலருக்கு குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்பட இருப்பதாகவும் பல ஆசை வார்த்தைகள் கூறி அவ்வாறு வழங்கப்பட வேண்டுமானால் நாக தேவதை சித்தர் பீட அறக்கட்டளையில்  உறுப்பினராக சேர்ந்து பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி உள்ளார்.

பாஜகவுடன் திமுக சமரசமாக சென்று விட்டதா.? நாடாளுமன்ற தேர்தலில் இலக்கு என்ன.?மு க ஸ்டாலின் கூறிய அதிரடி பதில்கள்

இந்நிலையில் நாகராஜனிடம் நீங்கள் ஐந்து  லட்சம் ரூபாய் வழங்கினால் மிக விரைவில் 5 கோடியாக திருப்பி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி நகை வியாபாரி நாகராஜன்  உட்பட பலர் தங்களது தகுதிக்கு ஏற்றார் போல் வீடு மற்றும் நகைகளை விற்று அவரிடம் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு நகை வியாபாரி நாகராஜன் பணம் கேட்டதற்கு கூடுதலாக பணம் வருகிற மாதிரி இருக்கிறது. அதனால் அவசரப்படாமல் சற்று காலதாமதம் செய்து வைத்துள்ளேன் எனக்கூறி உள்ளார். ஒவ்வொரு முறையும் நகை வியாபாரி நாகராஜன் பணம் கேட்கும் பொழுதும் இதே பதிலையே அறக்கட்டளை நிர்வாகி இசக்கி முத்து கூறிவந்துள்ளார். இதனால் நாகராஜனுக்கு கடனுக்கு மேல் கடன் அதிகமாகி ஊருக்குள் தலை காட்ட முடியாமல் தனது மனைவியின் நகைகள் மற்றும் தனது வீட்டினையும் விற்றுவிட்டு ஊரை காலி செய்து காரியாண்டி அருகில் உள்ள திருமலாபுரத்திற்கு சென்றுவிட்டார். பணத்தை இழந்த நாகராஜன் தற்போது கான்கிரீட் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

கேரள கொடூர நரபலி.! பிரிட்ஜ்-க்குள் இருந்த 10 கிலோ மனித இறைச்சி, எலும்புத் துண்டுக்கள்- அதிர்ச்சியில் போலீஸ்

தான் பணத்தை இழந்த விபரம் குறித்து வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். பின்பு ஹலோ போலீசில் நாகராஜன் புகார் அனுப்பியுள்ளார். பின்பு ஹலோ போலீசிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக தொடர்பு கொண்டு புகார் செய்யுமாறு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இதனால் நாகராஜன் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சதுரங்க வேட்டை பாணியில் தான் ஏமாற்றப்பட்ட கதையை கண்ணீருடன் புகாராக அளித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த பாஸ்டர் ஏ.பி ராஜன் மற்றும், நாக தேவதை சித்தர் அறக்கட்டளை நிர்வாகி இசக்கிமுத்து , மற்றும் இசக்கி முத்துவின் மனைவி ஆகியோரிடம் நாகராஜன் தொலைபேசியில் பேசிய ஆடியோ, மற்றும் வீடியோ பதிவுகளையும் புகாரில் சமர்ப்பித்துள்ளார். 

தனது புகார் குறித்து தமிழக அரசும் காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுத்து தன்னையும் இழந்த பணத்தை மீட்டுத் தந்து தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் எனவும், மேற்கண்ட சதிகார கும்பல்களின், தொலைபேசி எண்களையும், வங்கி கணக்குகளையும் முறையாக ஆய்வு செய்து விசாரித்தால் தன்னைப் போல் ஏமாந்த பல பேர்களின் உண்மை நிலை  வெளிச்சத்துக்கு வரும் எனவும் புகார் அளித்துள்ளார். ஏமாந்தவர்கள் பட்டியலில் அரசு ஊழியர், தையல் கடைக்காரர், விவசாயி வியாபாரி, பெண்கள் என பல தரப்பினர் உள்ளதாக நகை வியாபாரி நாகராஜன் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தேவர் சிலை தங்க கவசம் யாருக்கு..? ஓபிஎஸ்யையும், இபிஎஸ்யையும் கழட்டிவிட்டு புதிய முடிவெடுத்த அறங்காவலர்

 

click me!