கேரளாவில் நரபலி கொடுத்த இரண்டு பெண்களின் 10 கிலோ மனித இறைச்சி மற்றும் எலும்பு துண்டுகளை கொலையாளிகளின் வீடுகளில் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரளாவில் கொடூர நரபலி
கேரளாவில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலி மந்திரவாதியான ஷாபி மற்றும் மருத்துவர் பகவல் சிங் அவரது மனைவி லைலாவையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எர்ணகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதியான ஷாபி, தனது மனைவியின் செல்பேசியில் இருந்து சமூக வலைதளத்தில் 'ஸ்ரீதேவி' என்ற பெயரில் போலி கணக்கை உருவாக்கினார். அப்போது மருத்துவர் பகவான் சிங் தொடர்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் அதில் இருந்து மருத்துவர் பகவான சிங்கும், மற்றும் அவரது மனைவி லைலாவுடன் போலி மந்திரவாதி ஷாபி நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
மனித மாமிசம் சமைத்து சாப்பிட்டனர்
undefined
அப்போது இளமையாக இருக்கவும், பணக்காரராக வேண்டும் என்ற தங்களது ஆசையை கூறியுள்ளனர். இதனையடுத்து நரபலி கொடுத்தால் உடனடியாக செல்வம் பெருகும் என ஷாபி நம்ப வைத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து தான் கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி எர்ணாகுளம் காலடியில் லாட்டரி வியாபாரம் செய்துவந்த ரோஸ்லி என்ற பெண்ணையும் பண ஆசை நரபலி கொடுத்துள்ள்னர். இதனையடுத்து இரண்டாவது முறையாக கடந்த மாதம் 26-ம் தேதி எர்ணாகுளத்தில் லாட்டரி விற்று வந்த தருமபுரியைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணையும் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளனர். பத்மாவை நரபலி கொடுத்தப் பிறகு சில பூஜைகள் செய்துள்ளார் முகமது ஷாஃபி. பின்னர் உடலை 56 துண்டுகளாக வெட்டியுள்ளனர். அப்போது தான் உடலின் ஒரு சில பாகங்களை சாப்பிடவும் செய்துள்ளனர்.
கேரளாவை போல் திருவண்ணாமலையில் நரபலியா.? மாந்திரீக பூஜையில் ஈடுபட்ட 6 பேரால் பரபரப்பு
பிரிட்ஜில் மனித மாமிசம்
நரபலி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஷாபி, பகவல் சிங், லைலா ஆகிய 3 பேரை 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து நரபலி நடந்த பகவல்சிங் வீட்டிற்கு குற்றவாளிகளை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய்களுடன் ஆய்வு நடத்தி வரும் போலீசார், வீட்டின் பின்புறம், உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், நரபலி கொடுத்து வந்த பகவல்சிங் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், பிரிட்ஜில் இருந்து 10 கிலோ மனித இறைச்சி மற்றும் எலும்புத் துண்டுகளை கண்டறிந்துள்ளனர்.
மாயமான 26 பெண்கள்
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பகவல்சிங் வீட்டைச் சுற்றி சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நரபலி கொடுக்கப்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 26 பெண்கள் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 14 பெண்களும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 12 பெண்களும் காணாமல் போயுள்ளனர். ஒருவேளை இவர்களும் நரபலி கொடுக்கப்பட்டிருப்பார்களா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்