திருச்சி ரயில்வே பார்சல் ஆபிஸ் சாலை அருகே வாடகை கார் ஓட்டுநரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறத்த 3 பேர் கொண்ட ரவுடி கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருச்சி லால்குடியை சேர்ந்தவர் பூபதி வயது 25 தனியார் கால் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ரயில்வே பார்சல் ஆபீஸ் சாலையில் பயணி ஒருவரை இறக்கிவிட்டு தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மூன்று பேர் பூபதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூபாய் 2150 பணத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
ஷாக்கிங் நியூஸ்.. பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை அதிரடி உயர்வு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
undefined
இதுகுறித்து கால் டாக்ஸி ஓட்டுனர் பூபதி திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் ஆய்வாளர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டிய குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் திருச்சி மிளகு பாறை பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்கிற வெந்தக்கை பாலா, கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த ஷாஜகான் மற்றும் திருச்சி சந்தை கடை பகுதியை சேர்ந்த கணேஷ் என காவல் துறையினர் கண்டு பிடித்தனர்.
திராவிட மாடலை உருவாக்கியதே நாங்கள் தான் - பழனிசாமி தடாலடி
மேலும் மூன்று பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இந்த மூவர் மீதும் கண்டோன்மென்ட், ஸ்ரீரங்கம், தில்லை நகர், அரியமங்கலம், எடமலைப்பட்டி புதூர், கோட்டை காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது அதனை தொடர்ந்து மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.