பிஎப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் கையெறி குண்டு வீசப்படும் என காவல்நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்படுட்டுள்ளது.
போலீசுக்கு வந்த மர்ம கடிதம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்களை சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்களை கூறி வந்த மத்திய அரசு, பிஎப்ஐ அலுவலகங்களில் சோதனை நடத்தி 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களையும் போலீசார் கைது செய்திருந்தனர்.
16 இடங்களில் குண்டு வீச்சு
இந்தநிலையில் தற்போது பிஎப்ஐ அமைப்பிற்கு மத்திய அரசு 5 ஆண்டு கால தடை விதித்துதள்ளது. இதனை எதிர்த்து அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் பொள்ளாச்சியில் உள்ள காவல்நிலைய ஆய்வாளருக்கு மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை எங்களுக்கு எதிரியல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் எஸ்டிபிஐ குமரன் நகர் என எழுதப்பட்டுள்ளது. இந்த கடித்த்தால் அதிர்ச்சி அடைந்த பொள்ளாச்சி காவல்துறையினர் காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கடிதம் எழுதியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
சென்னையில் மீண்டும் ஒரு லாக்கப் மரணம்...! போலீசார் தாக்கியதில் ரவுடி உயிரிழந்ததாக புகார்