திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கால்களை இழந்த வாலிபருடன் காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணை, பெற்றோர் அடித்து, இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கேசவனேரியைச் சேர்ந்தவர் பிரகாஷ், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கேசவனேரியை அடுத்த வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் திவ்யா. பிரகாசும், திவ்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிகாஷ் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் தனது இரு கால்களையும் இழந்தார்.
மாநகராட்சி அதிகாரிகள் மீது கடை உரிமையாளர் தாக்குதல் - தூத்துக்குடியில் பரபரப்பு
கால்களை இழந்தாலும் பிரகாசும், திவ்யாவும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு திவ்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் தனது மகள் திவ்யாவை, கணேசன் கடத்திச் சென்றுவிட்டதாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தனர்.
திறந்த வெளியில் உடை மாற்றும் பெண்கள்: மாவட்ட நிர்வாகத்தை வசைபாடும் பயணிகள்
இந்த நிலையில், காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு மணமகனின் வீட்டில் இருப்பதாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற பெண்ணின் பெற்றோர் கால் இல்லாத நபரை எப்படி திருமணம் செய்துகொள்வாய் என்று பிரகாசை சரமாரியாக தாக்கிவிட்டு திவ்யாவை அழைத்துச் சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து பிரித்துச் சென்றுள்ளனர், எங்கள் இருவரையும் சேர்த்துவைக்குமாறு பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.