ஆன்லைனில் ட்ரோன் கேமிரா ஆர்டர் போட்ட இளைஞருக்கு ஒரு கிலோ உருளைக்கிழங்கு பார்ச்சல்.. 85 ஆயிரம் அபேஸ்..

By Ezhilarasan BabuFirst Published Sep 29, 2022, 4:38 PM IST
Highlights

85 ஆயிரம் மதிப்பில் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்த நபருக்கு வெறும் ஒரு கிலோ உருளைக்கிழங்கு பார்சல் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதற்கான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

.
 

85 ஆயிரம் மதிப்பில் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்த நபருக்கு வெறும் ஒரு கிலோ உருளைக்கிழங்கு பார்சல் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதற்கான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஒருகாலத்தில் எதற்கெடுத்தாலும் கடைக்குப் போய் வாங்கிய காலம் மாறி, தற்போது வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்தால் போதும், வீடு தேடி பொருட்களை கொண்டு வந்து தருவதற்கான தனியார் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆடைகள், செல்போன்கள், காலணிகள், மளிகை பொருட்கள்,  உணவுகள் என ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி அதிகரித்து உள்ளது.  இது பெரிய அளவில் உதவியாக இருந்தாலும் சில நேரங்களில் மோசடிகளும் அரங்கேறி வருகிறது.

இதையும் படியுங்கள்:  பொள்ளாச்சியில் 16 இடங்களில் குண்டு வீசுவோம்..! காவல்நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு

தரமான நிறுவனங்களை தேர்வு செய்து ஆர்டர் செய்யாவிட்டால் பணம் ஏமாற்றப்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற ஒரு மோசடி சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.  ஒரு இளைஞர் ஆன்லைனில் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்துள்ள நிலையில் அவருக்கு உருளைக்கிழங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் நாளந்தாவில் பர்வால்பூரில் உள்ள ஒரு இ காமர்ஸ் தளமான meesho தளத்தில் இளைஞர் ஒருவர்  84, 999  ரூபாய் மதிப்புள்ள ஒரு ட்ரோன் கேமிரா 10, 212 ரூபாய்  தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் விற்பனைக்கு வந்தது.

இதையும் படியுங்கள்: குடும்ப தகராறில் அத்துமீறிய கணவன்.. திடீரென்று கணவனை ஆணுறுப்பை வெட்டிய மனைவி.. வெளியான அதிர்ச்சி காரணம் !

அதை பார்த்த அந்த இளைஞர் விலை குறைவாக இருக்கிறதே என எண்ணி அதை ஆர்டர் செய்தார், அதற்கான மொத்த தொகையையும் அந்த இளைஞர் ஆன்லைனில் செலுத்தினார், சில தினங்கள் கழித்து டெலிவரி ஏஜென்ட் ஆர்டரை டெலிவரி செய்ய வந்தார், அப்போது பார்சல் மிகவும் சிறியதாக இருந்ததால், அதைத் திறந்து காட்டும்படி அந்த இளைஞர் கேட்டார், அதற்கு அந்த டெலிவரி பாய், அதைத் திறந்து காண்பித்தார். அப்போது அதில் கேமராவுக்கு பதிலாக உருளைக்கிழங்குகள் இருந்தது,  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், 

அந்த பார்சலை வாங்க மறுத்ததுடன் மோசடி நடந்திருப்பதை அம்பலப்படுத்தியுள்ளார். ஆர்டரை கொண்டுவந்த ஏஜென்ட்டிடம் விசாரித்ததில் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார். இதில் என்ன இருக்கிறது என்பது கூட தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் ஆர்டர் செய்த இளைஞர் இதுகுறித்து உள்ளூர் காவல் நிலைத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் போலீசார் இது குறித்து விசாரித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். 
 

click me!