Yuvan Shankar Raja : வெறித்தனமான ரசிகன்.... விஜய் சொன்னதை கேட்டு மெர்சலாகிட்டேன் - யுவன் சங்கர் ராஜா பேச்சு

Ganesh A   | Asianet News
Published : Mar 01, 2022, 07:44 AM IST
Yuvan Shankar Raja : வெறித்தனமான ரசிகன்.... விஜய் சொன்னதை கேட்டு மெர்சலாகிட்டேன் - யுவன் சங்கர் ராஜா பேச்சு

சுருக்கம்

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய யுவன், தனது திரையுலக பயணம் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

யுவனின் இசையை ரசிக்காத இளைஞர்கள் தமிழகத்தில் அறவே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய இசையின் மூலம் தனக்கென மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உடையவர். இவருடைய இசைக்காக மட்டுமே வெற்றிப்பெற்ற படங்களின் எண்ணிக்கை ஏராளம். நடிகர் சரத்குமார் நடிப்பில் கடந்த 1977-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது இசைப்பயணத்தை தொடங்கிய யுவன் (yuvan), அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை வரை பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இவ்வாறு இளசுகளின் இசை அரசனாக வலம் வரும் யுவன் சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை நேற்று கொண்டாடினார். இதற்காக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய யுவன் (Yuvan), தனது திரையுலக பயணம் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது நடிகர் விஜய் (Vijay) உடனான சமீபத்திய சந்திப்பு குறித்து ஒருவர் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பேசும்போது நடிகர் விஜய்யின் மகன் தனது தீவிரமான ரசிகன் என்பதை தெரிவித்தார். அவர் Yuvanism என எழுதப்பட்ட டீ-சர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை விஜய்யின் உதவியாளர் தனக்கு அனுப்பியதாகவும், இதைப்பார்த்து தான் மிகவும் உற்சாகமடைந்ததாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் விஜய்யை சந்தித்தபோது, விஜய்யும் இதுகுறித்து என்னிடம் கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் ஜேசன் சஞ்சய் Yuvanism என எழுதப்பட்ட டீ-சர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை விஜய் தான் தனது உதவியாளரிடம் கூறி யுவனுக்கு அனுப்ப சொன்னாராம். இந்த தகவலையும் யுவன் மேடையில் கூறினார்.

இதையும் படியுங்கள்... இந்த வயசுல இதெல்லாம் தேவையா?.... மேடையில் பீஸ்ட் பட நடிகையிடம் பல்ப் வாங்கிய சல்மான் கான் - வைரலாகும் வீடியோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே ஒரு போன் கால் சாமி மாதிரி வந்து காப்பாற்றிய கார்த்திக்!
பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?