
சைத்ரா ரெட்டி ஒரு மாடல் மற்றும் நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறையில் பணிபுரிகிறார். அவர் தமிழ் சீரியல் யாரடி நீ மோகினி மற்றும் கன்னட திரைப்படமான ரக்ட் (2019) ஆகியவற்றிற்காக நன்கு அறியப்பட்டவர்.
சமீபத்தில் சைத்ரா ரெட்டி..பூவே பூச்சுடவா, திருமதி ஹிட்லர் உள்ளிட்ட முன்னணி சீரியல்களில் தோன்றியுள்ளார்...இதைத்தொடர்ந்து சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்..தந்தையை இழந்த குடும்பத்தில் இரண்டாவது பிள்ளைக்காக இருக்கும் கயல் முத்த அண்ணன் குடிப்பழக்கத்திற்கு ஆளான காரணத்தால் அவரது மனைவி ,குழந்தை, இரண்டு தங்கை, தம்பி என அனைவரையும் சுமக்கும் கடமையை சுமந்துள்ளார்.
செவிலியராக தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் கயல் அங்கு உள்ள எதிரிகளையும் சமாளிப்பதோடு.. தன குடும்பத்தை அளிக்க என்னும் பெரியப்பாவின் வில்லா தனங்களையும் சமாளிக்கிறார்...இதற்கிடையே கயலின் மூத்த தங்கை கர்ப்பமாக இருப்பதை அறிந்த கயல்..தங்கை காதலிக்கும் நபருடன் திருமண செய்து வைக்க படாத பாடு படுகிறார்..
இவ்வாறு மிகவும் பொறுப்பான, திறமை வாய்ந்த பெண்ணாக சுழலும் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி...சக அந்த நாடகத்தில் தம்பியாக நடிக்கும் அவினாஷுடன் இணைந்து இன்ஸ்டா சேலஞ்ச் செய்துள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.