யுவன் - சிம்பு காம்போவில் உருவான ' தப்பு பண்ணிட்டேன்'..! டீஸர் இதோ..!

Published : Jul 07, 2021, 04:53 PM IST
யுவன் - சிம்பு காம்போவில் உருவான ' தப்பு பண்ணிட்டேன்'..! டீஸர் இதோ..!

சுருக்கம்

யுவன் - சிம்பு காம்போவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் "U1 ரெக்கார்ட்ஸ்" தயாரிப்பில், சிம்பு பாடியுள்ள தப்பி பண்ணிட்டேன் ஆல்பம் பாடலின் டீஸர் வெளியாகியுள்ளது.  

யுவன் - சிம்பு காம்போவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் "U1 ரெக்கார்ட்ஸ்" தயாரிப்பில், சிம்பு பாடியுள்ள தப்பி பண்ணிட்டேன் ஆல்பம் பாடலின் டீஸர் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக, பாடல்களுக்கு இசையமைப்பது மட்டும் அல்லாமல், இளம் இசையமைப்பாளர்கள் திறமையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக, தன்னுடைய U1 ரெக்கார்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் சில ஆல்பம் பாடல்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் உருவாகியுள்ளது தான் 'தப்பு பண்ணிட்டேன் பாடல்'.

இந்த பாடலை அறிமுக இசையமைப்பாளர் பிரியன் என்பவர் இசையமைத்துள்ளார்.  நடிகர் சிம்பு தன்னுடைய காந்த குரலால் பாட, விக்னேஷ் ராமகிருஷ்ணா என்பவர் இப்பாடலை எழுதியுள்ளார். இதில் இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளனர். 

நடன இயக்குனர் சாண்டி நடனம் அமைத்துள்ளார். பலரும் எதிர்பார்த்த யுவன் - சிம்பு காம்போ வழக்கம் போல் இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது. "இங்க பிரியப்போறம்-னு தெரிஞ்சு யாரும் லவ் பண்றது இல்ல. என துவங்கும் இந்த பாடல் முழுவதும் காதல் வரிகளை எதார்த்தமான வார்த்தைகளால் பாடி அசத்தியுள்ளார் சிம்பு.  தற்போது இந்த பாடலில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்