YouTuber Irfan : தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில், தமிழக மருத்துவத்துறை, இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்தது.
தொடக்க காலத்தில் உணவு மற்றும் வாகனங்களை பற்றி ரிவியூ கூறி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் இர்ஃபான். இன்று கோலிவுட் உலகில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அந்த பட குழுவினரை தனது youtube சேனல் மூலம் பேட்டி கண்டு, அதை வீடியோவாக வெளியிடும் அளவிற்கு தமிழகத்தில் உள்ள மிகவும் பணக்கார YouTuberராக திகழ்ந்து வருகிறார் இர்ஃபான்.
இந்நிலையில் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்த வீடியோவை அண்மையில் அவர் வெளியிட்டிருந்தார். ஆனால் இந்திய மருத்துவ விதிமுறைகளின்படி அது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் மருத்துவகுழுவினர் பரிந்துரை செய்தனர்.
undefined
இதனை அடுத்து youtuber இர்ஃபான் சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை நீக்கியது மட்டுமில்லாமல், அப்படி ஒரு விஷயத்தை செய்ததற்காக தமிழக அரசின் மருத்துவ துறையிடம் மன்னிப்பும் கூறியிருந்தார். இந்நிலையில் அவருடைய அந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ள மருத்துவ துறை, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெளியிட்ட அந்த சச்சையான வீடியோவில் தனது மனைவியின் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை தான் என்று ஸ்கேன் மூலம் அறிந்து கொண்டதாக தெரிவித்திருந்தார், ஆனால் இந்திய சட்டம் மற்றும் மருத்துவ நெறிமுறைகளின் கீழ் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ள கூடாது.
மருத்துவர்களும் அதை குழந்தையின் பெற்றோர்களுக்கு குழந்தை பிறக்கும் வரை அறிவிக்க கூடாது. ஆனால் அதை மீறி இர்பான் செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க விருந்த நிலையில் தற்போது அந்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.