Shah Rukh Khan : பாலிவுட் உலகின் பாஷாவாக விளங்கும் பிரபல நடிகர் ஷாருக்கான் இப்பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் "வெப்ப வாதத்தால்" பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாயன்று தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியைக் காண அவர் அகமதாபாத் சென்றிருந்தார்.
நடிகர் ஷாருகான், அகமதாபாத்தில் நிலவும் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீரிழப்பு நோயால் அவதிப்பட்டார் என்றும், அவர் உடல்நிலை இப்பொது சீராக இருந்தாலும் மருத்துவக் கண்காணிப்பில் அவர் உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்கள் அங்கு குவியம் இருக்க மருத்துவமனையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்றும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய பட்ஜெட் படம்.. ரஜினிகாந்த், நாகார்ஜுனா இருந்தும் அட்டர் பிளாப் ஆன படம் - எது தெரியுமா?
நடிகர் ஷாருக்கானின் நெருங்கிய தோழியும், நடிகையுமான ஜூஹி சாவ்லா அவரை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தார். மருத்துவமனையின் அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என அம்மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷாருக்கானின் உடல் நிலை இப்பொது சீராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் அணியின் இணை உரிமையாளரான ஷாருக்கான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் வெற்றியை செவ்வாய்க்கிழமை இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கொண்டாடினார். ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) மீது கேகேஆர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது குழந்தைகளான சுஹானா கான் மற்றும் ஆப்ராம் கான் ஆகியோருடன் ஷாருக்கான் வீரர்களை வாழ்த்தினார்.
KKR மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL)ன் அதிகாரப்பூர்வ Instagram பக்கங்கள் ஷாருக் குடும்பத்தின் கொண்டாட்ட படங்கள் மற்றும் வீடியோக்கல் பகிரப்பட்டுள்ளன. மேலும் போட்டி நடந்த அரங்கில் ஷாருக் ஷாருக் என்ற கோஷங்கள் அரங்கத்தை நிரப்பியது, மேலும் ஷாருக் தனது Signature ஸ்டைலில் தன் ரசிகர்களை மகிழ்வித்தார்.