மர்மமான முறையில் இறந்துகிடந்த மலையாள இளம்பெண் இயக்குநர்...

By Muthurama LingamFirst Published Feb 25, 2019, 9:37 AM IST
Highlights

'ஸ்வாதித் திருநாள்’,’தெய்வத்திண்டே விக்ருதிகள்’ போன்ற விருது பெற்ற படங்களை இயக்கியவரும், கேரள திரைப்பட வளர்ச்சித்துறையின் முன்னாள் தலைவருமான லெனின் ராஜேந்திரன் உதவியாளரும், பெண் இயக்குநருமான நயனா சூரியன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவருக்கு வயது 28.

'ஸ்வாதித் திருநாள்’,’தெய்வத்திண்டே விக்ருதிகள்’ போன்ற விருது பெற்ற படங்களை இயக்கியவரும், கேரள திரைப்பட வளர்ச்சித்துறையின் முன்னாள் தலைவருமான லெனின் ராஜேந்திரன் உதவியாளரும், பெண் இயக்குநருமான நயனா சூரியன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவருக்கு வயது 28.

கேரள மாநிலம், கொல்லம் அருகே கருநாகப்பள்ளியை சேர்ந்தவர்  நயனா சூரியன் (28). பிரபல இயக்குனர்களான லெனின் ராஜேந்திரன், கமல், ஜித்து  ஜோசப், பிஜூ ஆகியோரிடம் ஏராளமான படங்களில் உதவி இயக்குனராக  பணிப் புரிந்துள்ளார். சமீபத்தில் ‘பக்‌ஷிகளுடே மனம்’ என்ற படத்திற்கு  திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். திருமணமான பிறகு பெண்களின் சுதந்திரம் எப்படி பறிபோகிறது என்கிற கருத்தை மையமாகக் கொண்ட படம் அது.

இதுவரை திருமணம் செய்துகொள்ளாத இவர் திருவனந்தபுரம்  வெள்ளையம்பலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து  வந்தார். இயக்குநர் லெனின் ராஜேந்திரனிடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உதவி இயக்குநராகவும், அவரது பர்சனல் செக்ரட்டரி போலவும் பணியாற்றி வந்த நயனா, கடந்த ஜனவரி 14 அன்று லெனின் ராஜேந்திரன் மறைந்த பிறகு மிகவும் அப் செட்டாக இருந்ததாகவும், சரியான நேரத்தில் உண்ணாமல் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று  காலை வீட்டில் நயனா சூரியன் மர்மமான  முறையில் இறந்து கிடந்தார். போலீசார் சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது உடல்  திருவனந்தபுரம் மானவீயம் வீதியில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.  இதையடுத்து உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, நயனா சூரியன் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

click me!