பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ் இந்திய ஆவணப் படத்துக்கு ஆஸ்கர் விருது !! கோவை முருகானந்தம் கதை ..

By Selvanayagam PFirst Published Feb 25, 2019, 9:07 AM IST
Highlights

மாதவிடாய் காலங்களில் மிகவும் கஷ்டப்படும் ஏழைப் பெண்களுக்கு மலிவு விலையில் நாப்கின் தயாரித்து வழங்கிய கோவை முருகானந்தம் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ் என்ற இந்திய ஆவணப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

91 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். 

91-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக இருந்த நடிகர் கெவின் ஹார்ட் விலகியதை அடுத்து, வேறு யாரும் தொகுத்து வழங்கவில்லை. இதனால் தொகுப்பாளர் இல்லாமலேயே இந்த விழா நடக்கிறது. 91-வது ஆஸ்கர் விருதுக்கு, தி ஃபேவரைட் மற்றும் ரோமா படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தலா 10 பிரிவுகளில் இரண்டு படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

2019- ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் விவரம் 

1.சிறந்த துணை நடிகை- ரெஜினா கிங்   படத்தில் சிறப்பான நடிப்பை   
   வெளிப்படுத்தியதற்காக வழங்கப்பட்டுள்ளது.
2.சிறந்த ஆவணப்படம்-  ஃப்ரீ சோலோ.
3.சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம்: வைஸ் 
4.சிறந்த ஆடை வடிவமைப்பு : பிளாக் பேந்தர் 


5.சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு :  ரூத் கார்டர் (பிளாக்பேந்தர் படத்துக்காக பெற்றார்)
6.சிறந்த ஒளிப்பதிவு: ரோமோ படத்துக்காக அல்போன்சா குரோன்
7. சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: ரோமோ (மெக்சிகோ நாட்டு திரைப்படம்)
8. சிறந்த ஒலிப்பதிவு தொகுப்பு: போகிமியான் ராப்சோடி

இதே போல் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழர் ஒருவரைப் பற்றிய ஆவணப்படம் விருதை வென்றுள்ளது. பெண்களுக்கு மலிவு விலையில் நாப்கின் உருவாக்கிய . கோவையைச் சேர்ந்த முருகானந்தம்  அருணாச்சலம் என்பவரைப் பற்றிய ’பீரியட். என்ட் ஆஃப் செண்ட்டன்ஸ்’ என்ற ஆவணப்படம் தற்போது விருதை வென்றுள்ளது.

தொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது.அடுத்தடுத்து ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

click me!