நம்ப வைத்து ஏமாற்றிய அனுஷ்கா! உண்மை தெரிந்ததும் காண்டான ரசிகர்கள்!

By manimegalai aFirst Published Feb 24, 2019, 7:20 PM IST
Highlights

உடல் எடையை குறைப்பதற்காக அமெரிக்க வரை சென்று சிகிச்சை பெற்று வந்த பின் அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாக, ரசிகர்கள் அனைவரும் அசந்து போய் விட்டனர். அந்த அளவிற்கு ஆளே மாறி போய் ஸ்லிம் பிட்டாக இருந்தார். ஆனால் அந்த புகைப்படம் பழையது என தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் கொஞ்சம் காண்டில் இருக்கிறார்கள் அனுஷ்கா ரசிகர்கள்.
 

உடல் எடையை குறைப்பதற்காக அமெரிக்க வரை சென்று சிகிச்சை பெற்று வந்த பின் அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாக, ரசிகர்கள் அனைவரும் அசந்து போய் விட்டனர். அந்த அளவிற்கு ஆளே மாறி போய் ஸ்லிம் பிட்டாக இருந்தார். ஆனால் அந்த புகைப்படம் பழையது என தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் கொஞ்சம் காண்டில் இருக்கிறார்கள் அனுஷ்கா ரசிகர்கள்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா 34 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல், தொடர்ந்து படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அரை டஜன் படங்களுக்கு குறைவில்லாமல் கையில் வைத்திருக்கும் இவர், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன்னுடைய உடல் எடையை அதிகரித்தார். இந்த படத்தில் நடித்து முடித்த பின் உடல் எடையை குறைக்க அனுஷ்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவரால் எடையை குறைக்க முடியவில்லை.

பாகுபலி படத்தில் கூட இவரை ஒல்லியாக காட்ட ஸ்பெஷல் எபெக்ட் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக பட வாய்ப்புகள் குறையவே, பெற்றோரின் ஆசைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

திருமணம் நடைபெற வேண்டும் என பெற்றோருடன் பல்வேறு கோவில் குளங்களுக்கு சென்று, திருமண தடை நீங்க பூஜைகள் செய்தார். இருப்பினும் ஒரு சில காரணங்களால் இவருக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை.

எனவே மீண்டும் தன்னுடைய கவனத்தை படங்கள் நடிப்பதில் செலுத்தியுள்ளார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை ஒன்றில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து திரும்பிய பின் அனுஷ்கா புதிய போட்டோ சூட்ஒன்றை நடத்தி, அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

இதில் அனுஷ்காவை பார்த்தவர்கள், எப்படி இருந்த அனுஷ்கா இப்படி ஆகிவிட்டாரே என மூக்கு மேல் விரல் வைக்கிறார்கள். காரணம் அந்த அளவிற்கு தன்னுடைய உடல் எடையை குறைத்து செம்ம பிட்டாக மாறியுள்ளார். 

ஆனால், அது இப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை பழைய புகைப்படம் என தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மரணமடைந்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுஷ்கா வந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியது .அதில் அவர் மீண்டும் குண்டாகத்தான் காணப்படுகிறார் , ஒல்லியாகவே இல்லை என கூறி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

It's a sincere request to some people here to show some humanity and stop bodyshaming this lady..We respect Sweety gaaru for always being real and genuine from heart and she doesn't deserve to be judged at this moment🙏Be human at this time.. pic.twitter.com/iumpRSVcVU

— TeamPranushkaOfficial (@TPranushka)

click me!