தந்தையை இழந்த இளம் நடிகை... சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!

By Kanimozhi Pannerselvam  |  First Published Aug 31, 2021, 9:40 PM IST

ரவீனாவின் தந்தை உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்த சம்பவம் அவரை பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ் திரையுலகில் முன்னணி டப்பிங் நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீஜா ரவி. இவரது மகள் ரவீனா அம்மாவைப் போலவே டப்பிங் கலைஞராக மட்டும் இல்லாமல், ஒரு கிடாயின் கருணை மனு, காவல்துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார். டப்பிங் கேரியரைப் பொறுத்தவரை சமந்தா, காஜல் அகர்வால், மாளவிகா மோகனன், அமலா பால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளின் நடிப்பிற்கு உயிர் கொடுப்பது ரவீனாவின் குரல் தான். 

Latest Videos

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் எமி ஜாக்சனுக்கு டப்பிங் பேசியதற்காக விருது பெறும் அளவிற்கு கோலிவுட்டில் பிரபலமானவர். இந்நிலையில் ரவீனாவின் தந்தை உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்த சம்பவம் அவரை பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஸ்ரீஜாவின் கணவரும், ரவீனாவின் தந்தையுமா ரவீந்திரநாத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக செய்தி வெளியாகியுள்ளது. ரவீனாவிற்கு ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

tags
click me!