ஆரம்பிக்கலாமா?.. பிக்பாஸ் சீசன் 5 டீசரில் இதை கவனிச்சீங்களா?

By Kanimozhi Pannerselvam  |  First Published Aug 31, 2021, 8:58 PM IST

கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பான நிலையில், இந்த ஆண்டும் அதே தேதியில் ஒளிபரப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது


விஜய் தொலைக்காட்சியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இதுவரை 4 சீசன்கள் சூப்பர் டூப்பராக நிறைவடைந்துள்ள நிலையில், 5வது சீசன் மீதான ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது. இடையில் எங்கே கொரோனா 3வது அலை வந்து தடையாகிவிடுமோ என்று கூட ரசிகர்கள் அஞ்சிக்கொண்டிருந்தனர். 

Latest Videos

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த பிக்பாஸ் சீசன் 5 குறித்த அதிகாரப்பூர்வ டீசரை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் நடிகரும், அரசியல்வாதியும், பிக்பாஸ் தொகுப்பாளரும் கமல்ஹாசன் தன் விக்ரம் பட டைட்டில் இசையோடு ''ஆரம்பிக்கலாமா?'' என தொடங்கிவைக்கிறார். சீசன் 5 ஸ்பெஷலாக பிக்பாஸ் கண் லோகோ பிங்க் நிறத்திற்கு மாறி கண்ணைப் பறிக்கிறது.  கண் வடிவ லோகோவினுள் ஸ்டார் விஜய் லோகோ குறியீடாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பான நிலையில், இந்த ஆண்டும் அதே தேதியில் ஒளிபரப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா, ‘குக் வித் கோமாளி’ கனி, சுனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது விஜய் டிவி. இதோ டீசர்... 

ஆரம்பிக்கலாமா? 😎 Season 5 | விரைவில்.. pic.twitter.com/Nozd1mE21X

— Vijay Television (@vijaytelevision)
click me!