​‘அரசியல் என்பது விசுவாசம் இல்லடா; இது ஒரு கணக்கு’... தூள் கிளப்பும் துக்ளக் தர்பார் டிரெய்லர்!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 31, 2021, 08:12 PM IST
​‘அரசியல் என்பது விசுவாசம் இல்லடா; இது ஒரு கணக்கு’... தூள் கிளப்பும்  துக்ளக் தர்பார் டிரெய்லர்!

சுருக்கம்

விஜய் சேதுபதி முதன் முறையாக அரசியல்வாதி கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

விஜய் சேதுபதி நடிப்பில் அரசியல் த்ரில்லரான தயாராகியுள்ள துக்ளக் தர்பார்  படத்தை அறிமுக இயக்குநரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். இதில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய கோவிந்த் வசந்தா இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். அதேபோல் நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு பார்த்திபன் - விஜய்சேதுபதி கூட்டணி இணைந்துள்ளது.


கடந்த ஆண்டு ஜூலை மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், கடந்த ஜனவரி மாதம் டீசர் வெளியிடப்பட்டது. அதில் சீமானை சீண்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆனால் அப்படியெல்லாம் யாரையும் சீண்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை என படக்குழு விளக்கமளித்திருந்தது. கொரோனா காரணமாக இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளது உறுதியானது. அதேபோல் துக்ளக் தர்பார் திரைப்படம் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பான பிறகே நெட்ஃபிலிக்ஸிலும் வெளியாகிறது என்பது சமீபத்தில் உறுதியானது. 

விஜய் சேதுபதி முதன் முறையாக அரசியல்வாதி கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. அதில் ‘இன்னும் முன்னூறு வருஷம் ஆனாலும் இங்கே எதுவுமே மாறாது, மாறவும் விடமாட்டாங்க என்ற வசனமும், அரசியல் என்பது விசுவாசம் இல்லை, அது ஒரு கணக்கு என்ற வசனமும்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!