எந்தவொரு சோசியல் மீடியாவிலும் தலை கட்டாமல் இருந்து வந்த ஜோதிகா முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. ரஜினி, கமல் என உச்ச நட்சத்திரங்களில் ஆரம்பித்து விஜய், அஜித், மாதவன் என தமிழில் ஜோதிகா ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே கிடையாது எனலாம். அதிலும் சூர்யா, ஜோதிகா காம்பினேஷனுக்கு எப்போதும் ரசிகர்கள் இடையே தனி வரவேற்பு உண்டு. கடந்த 2006ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, குடும்பம், குழந்தைகள் என கவனம் செலுத்தி வந்தார்.
அதன்பின் சில வருடங்கள் கழித்து ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியவத்தும் வாய்ந்த கதைகளில் நடித்து வருகிறார். ஜோதிகா நடிப்பில் அடுத்ததாக 'உடன்பிறப்பே' படம் வெளியாக உள்ளது. இரா.சரவணன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் மாதம் அமேசான் ப்ரைம் தளத்தில் இந்தப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் எந்தவொரு சோசியல் மீடியாவிலும் தலை கட்டாமல் இருந்து வந்த ஜோதிகா முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். தன்னுடைய முதல் பதிவில் முதன்முறையாக சோசியல் மீடியாவில் இணைந்துள்ளதாகவும், தன்னுடைய லாக்டவுன் காலத்தில் நிகழ்ந்த நிறைய நல்ல விஷயங்களை பகிர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜோதிகாவை சோசியல் மீடியாவிற்கு வரவேற்றுள்ள சூர்யா, “என் மனைவி வலிமையானவள். முதன்முறையாக உன்னை இன்ஸ்டாவில் பார்ப்பது த்ரில்லாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார். ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளே அவரை 1.3 மில்லியன் பேர் பாலோப் செய்துள்ளது அவர் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.