
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருபவர் யோகிபாபு. மேலும் ரஜினி, அஜித், விஜய், என முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதே நேரத்தில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் எந்தவிதமான காமெடி காட்சியாக இருந்தாலும் அதில் இறங்கி நடித்து அசத்துகிறார் யோகி பாபு.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த வடிவேலு மற்றும் சந்தானம் இருவருமே ஹீரோவாக நடிக்கத் துவங்கிய பின்பு, சிறந்த காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடிக்க பலர் போட்டி போட்ட நிலையில் இந்த இடத்தை நிரம்பியவர் காமெடி நடிகர் யோகி பாபு தான். சமீபத்தில் யோகிபாபு நடிப்பில் நவரசா திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
என்ன தான் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், யோகிபாபு சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் முதல் சினிமா அப்டேட்டுகள் வரை தன்னுடைய ரசிகர்களுக்காக சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு, நீல நிற வண்ணத்தில் கிருஷ்ணர் கெட்டப்பில் யோகிபாபு வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.