'தளபதி 65 ' படத்தில் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்..! அவரே உறுதி செய்த தகவல்..!

By manimegalai aFirst Published Jun 8, 2021, 12:47 PM IST
Highlights

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும், 65 ஆவது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தளபதி படத்தில் நடிக்க உள்ள தகவலை பிரபல முன்னணி காமெடி நடிகர் உறுதி செய்துள்ளார்.
 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும், 65 ஆவது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தளபதி படத்தில் நடிக்க உள்ள தகவலை பிரபல முன்னணி காமெடி நடிகர் உறுதி செய்துள்ளார்.

கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் தற்போது 'தளபதி 65 ' ஆவது படத்தில் நடித்து வருகிறார்.  விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதற்காக விஜய் தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கையேடு அன்று இரவே விமானத்தில் ஜார்ஜியா பறந்தார். சுமார் 15 நாட்களுக்கு மேல் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சுமார் 30 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: தளபதி விஜய்யின் மகன் சஞ்சயா இது? ஹீரோ லுக்கில் அசத்தும் மாஸ் லேட்டஸ்ட் போட்டோ..!
 

இதை தொடர்ந்து தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவியது. இதன் காரணமாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ள படக்குழு, அதற்காக மால் போன்ற ஒரு, செட்டை ஸ்டுடியோவில் அமைத்து வந்த நிலையில் அந்த பணிகள் அனைத்தையும் படக்குழுவினர் அதிரடியாக நிறுத்தினர். எனவே சற்று கொரோனா தணிந்த பிறகே மீண்டும், சென்னையில் விஜய் நடிக்க உள்ள 65 ஆவது படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் மஹத் - பிராச்சி தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தாச்சு..! முதல் முறையாக வெளியான குழந்தை புகைப்படம்..!
 

இந்நிலையில் ஏற்கனவே சர்க்கார், மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜய் மற்றும் அனைத்து முன்னணி ஹீரோக்கள் படங்களிலும் நடித்து வரும் யோகிபாபு, தளபதியின் 65 ஆவது படத்தில் நடிக்கிறீர்களா என ட்விட்டர் பக்கத்தில் யோகி பாபுவுடன் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்க்கு யோகி பாபுவும் ஆமாம் என பதிலளித்துள்ளார். இதன் மூலம் யோகி பாபு தளபதி 65 படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

click me!