'இனி என் நேரத்தையும் சக்தியையும் வீணாக்க விரும்பவில்லை' ராதிகாவின் ஆவேச ட்விட்!

Published : Jun 06, 2021, 07:25 PM IST
'இனி என் நேரத்தையும் சக்தியையும் வீணாக்க விரும்பவில்லை' ராதிகாவின் ஆவேச ட்விட்!

சுருக்கம்

சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகளை துவங்குபவர்களை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகளை துவங்குபவர்களை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபலங்கள் பலர், தங்களுடைய கருத்துகளையும், திரைப்படம் குறித்த தகவல்களையும் ரசிகர்களுக்கு நேரடியாக தெரிவிக்க, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் மிகவும் வசதியானதாக உள்ளது. ஆனால் சில பிரபலங்கள், இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் சேராமல் உள்ளதையே விரும்புகின்றனர். இப்படி பட்டவர்கள் பேரையும், சில பிரபலமான நடிகர் நடிகைகள் பேரிலும் சிலர் போலி கணக்குகளை உருவாக்குவது வழக்கமாக வைத்துள்ளார்.

ஆனால் பிரபலமான நட்சத்திரங்களை கண்டுபிடிப்பதற்கு ட்விட்டரில் இருக்கும் ப்ளூ டிக் வசதியாக இருந்தாலும், புதிதாக பிரபலங்கள் ட்விட்டரில் சேர்ந்தால் ரசிகர்கள் அதனை கண்டுபிடிப்பது சற்று கடினமே.  சமீபத்தில் கூட பிரபல இயக்குனர், மணிரத்னம் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் இணைவதாக அவரே கூறுவது போல கூறி ஒருவர் போலி ட்விட்டர் கணக்கை உருவாக்கினார். இதை பார்த்ததுமே பல ரசிகர்கள் மணிரத்னம் பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்கை தொடரவும் துவங்கி விட்டனர். பின்னர் இது குறித்த உண்மை தெரிய வந்த பின்னர், மணிரத்னத்தின் மனைவி நடிகை சுகாசினி, அது போலி கணக்கு என்பதை அறிவித்தார்.

மேலும் மணிரத்னம் ட்விட்டர் பக்கத்தில் இல்லை என்பது உறுதியானது. இதை தொடர்ந்து போலி கணக்கு உருவாக்கியவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து அந்த நிலையில், நடிகை ராதிகாவும் ட்விட்டர் பக்கம் மூலம் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்... "சில சமயங்களில் நாம் இந்த உலகத்தை மீட்பவர்கள் என நினைக்கும் மூளையில்லாத மற்றும் வேலையற்றவர்கள் இருப்பதை தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இணையத்தில் நீங்கள் விரும்பும் எதையும் நீங்கள் கொண்டிருக்கலாம், முட்டாள்தனமாக ஒருசிலர் வேலை செய்வதை நான் காண்கிறேன். இனி என் நேரத்தையும் சக்தியையும் வீணாக்க விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்". இத பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!