உண்மை வெளிவரும்... பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு ஆதரவாக யாஷிகா போட்ட ட்விட்!

Published : Jun 06, 2021, 06:59 PM IST
உண்மை வெளிவரும்... பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு ஆதரவாக யாஷிகா போட்ட ட்விட்!

சுருக்கம்

நடிகர் பியர்ல் வி.பூரி, கடந்த 2019ம் ஆண்டு மும்பை அருகில் உள்ள வசாயில் என்கிற பகுதியில் டிவி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, நடிகை ஒருவரின் 5 வயது குழந்தைக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், பிரபல நடிகை யாஷிகா 'உண்மை வெளியே வரும்' என்றும் என நடிகருக்கு ஆதரவாக ட்விட் செய்துள்ளார்.  

நடிகர் பியர்ல் வி.பூரி, கடந்த 2019ம் ஆண்டு மும்பை அருகில் உள்ள வசாயில் என்கிற பகுதியில் டிவி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, நடிகை ஒருவரின் 5 வயது குழந்தைக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், பிரபல நடிகை யாஷிகா 'உண்மை வெளியே வரும்' என்றும் என நடிகருக்கு ஆதரவாக ட்விட் செய்துள்ளார்.

நடிகர் பியர்ல் வி பூரி, குழந்தையை விளையாட அழைத்து செல்வதாக, தனியாக அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது. சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அதை அந்த நடிகை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த குழந்தைக்கு மறு தினமே உடல்நல பிரச்சனைகள் ஏற்படவே, குழந்தையின் தந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது, பாலியல் தொல்லைக்கு ஆளான விவரம் தெரிய வந்தது.

பின்னர் இதுகுறித்து நடிகையின் கணவரான, சிறுமியின் தந்தை மும்பை போலீசில் புகார் கொடுத்தார். மும்பை வர்சோவா போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்தபின், சம்பவம் வசாய் பகுதியில் நடந்திருப்பதால் வழக்கை அங்குள்ள காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். இந்நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் போலீசார் இந்த வழக்கு குறித்து, 5 வயது குழந்தையை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய அந்த நடிகரை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் இவருடன் நடித்த பாலிவுட் நடிகைகள் பலரும், அந்த நடிகர் அப்படி பட்டவர் இல்லை. மிகவும் மென்மையானவர், மரியாதையுடன் நடந்து கொள்பவர் என்று சப்போர்ட் செய்து வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து தற்போது பிரபல தமிழ் நடிகை யாஷிகாவும் நாகினி சீரியல் நடிகர் பியர்ல் வி பூரிக்கு ஆதரவாக, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில்,  பியர்ல் வி பூரி மிகவும் மென்மையான மனிதர். எனக்கு அவரை நன்றாக தெரியும். அவர் ஒரு கனிவான மனிதர். உண்மைக்காக காத்திருப்போம். எனது நண்பர் திரும்பி வருவார். “ என்று குறிப்பிட்டுள்ளார். பாலியல் வழக்கில் இளம் சீரியல் நடிகர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!