“கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் அன்று தேசிய விடுமுறை வேண்டும்”... யஷ் ரசிகர்களில் வைரல் கடித்தத்தால் சர்ச்சை...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 4, 2021, 7:23 PM IST
Highlights

முதல் பாகத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டியுடன் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

கன்னட திரையுலகின் பிரம்மாண்டமான கே.ஜி.எஃப் படத்தின் வெற்றி ஓட்டுமொத்த திரையுலகையும் வாய் பிளக்க வைத்தது. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கேஜிஎப் சாப்டர் 2 எடுக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியிலும் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் சமீபத்தில் இத்திரைப்படம் ஜூலை 16ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

முதல் பாகத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டியுடன் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த ரசிகர்களும் வெறித்தனமாக இந்த படத்தை காண வெயிட்டிங்கில் இருக்கும் இதே நேரத்தில், ரசிகர்களால் புது சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது கே.ஜி.எஃப் சேப்டர் 2 ரிலீஸ் தேதியான ஜூலை 16 அன்று தேசிய விடுமுறை அறிவிக்க வேண்டுமென கோரிக்கையுடன் மொட்டை கடிதம் ஒன்று வைரலாகியுள்ளது. 

Dear sir Consider Fans Emotion🥰😁 And Declare National Holiday On 16/7/2021💥 pic.twitter.com/1Idm64pgwV

— Rocking Styles (@styles_rocking)

" நடிகர் யாஷின் கேஜிஎஃப் 2ம் பாகம் 16/7/2021 வெள்ளிக்கிழமை தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏராளமான மக்கள் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள், எனவே ஜூலை 16ம் தேதியை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது ஒரு படம் மட்டுமல்ல, எங்களின் எமோஷன். எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் " ராக்கிங் ஸ்டார் யஷ் ரசிகர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலிக்கும் படி பிரதமர் மோடிக்கும் நேரடியாக டேக் செய்துள்ளது பலரையும் கோபமடைய வைத்துள்ளது. நாட்டின் பிரதமரிடம் ஒரு படத்திற்காக தேசிய விடுமுறை விடும்படி கோரிக்கை வைக்கலாமா? என விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

click me!