‘வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும்”... அப்பா மறைவிற்கு பிறகு பிக்பாஸ் பாலாஜியின் முதல் பதிவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 04, 2021, 05:18 PM IST
‘வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும்”... அப்பா மறைவிற்கு பிறகு பிக்பாஸ் பாலாஜியின் முதல் பதிவு...!

சுருக்கம்

 பெற்றோரை இழந்த பாலாஜி இப்போது எப்படி இருக்கிறாரோ? என அனைவரும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் பாலாஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரன்னராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் இருந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழக மக்களிடம் பிரபலமானார். ஏற்கனவே அம்மாவை பறிகொடுத்த பாலாஜி முருகதாஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய அப்பாவை இழந்தார். சமையல் கலைஞரான பாலாஜியின் தந்தை உடல் நலக்குறைவால் மரணமடைந்தது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. 

அப்பாவின் இறுதிச்சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழும் பாலாஜியின் போட்டோஸ் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களின் மனதை கரைய வைத்தது. பெற்றோரை இழந்த பாலாஜி இப்போது எப்படி இருக்கிறாரோ? என அனைவரும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் பாலாஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், ''வாழ்க்கையில எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், யார் என்ன சொன்னாலும், ஒரு தீர்வுதான். சரி வச்சிக்கோங்கன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கனும்'' ''உங்கள் அன்புக்கு நன்றி, நான் நலமாக இருக்கிறேன்''  என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!