கைதி, மாஸ்டர் படத்தில் பணியாற்றிய பிரபலத்திற்கு திருமணம்.! நேரில் சென்று வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்...!

manimegalai a   | Asianet News
Published : Feb 04, 2021, 02:48 PM IST
கைதி, மாஸ்டர் படத்தில் பணியாற்றிய பிரபலத்திற்கு திருமணம்.! நேரில் சென்று வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்...!

சுருக்கம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களிலும், இவர் இயக்க உள்ள 'விக்ரம்' படத்திலும் பணியாற்றிவரும் படத்தொகுப்பாளர் திருமணத்திற்கு லோகேஷ் கனகராஜ் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய மூன்று படங்களிலும் எடிட்டராக பணியாற்றியுள்ளவர் ஃபிலோமின்ராஜ்.  இவருக்கும், இவரது காதலி திவ்யா பிரதீபா என்பவருக்கும்  இன்று, சர்ச்சில் கிருஸ்தவ முறைப்படி திருமணம் நடந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் இந்த தம்பதிகளை நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.

திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை  ட்விட்டரில் வெளியிட்டு, " இன்று முதல் புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பிலோமின்ராஜ் - திவ்யா பிரதீபா ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்களுடைய புதிய பயணம் மகிழ்ச்சியுடன் தொடங்கட்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எடிட்டர்  ஃபிலோமின்ராஜ், லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்கள் மட்டும் இன்றி விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை செய்த 'ராட்சசன்' உள்பட பல படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ளார். மேலும் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள விக்ரம் படத்திலும் இவர் தான் எடிட்டராக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?
அதே 4 ஸ்டெப்... ரம்யா ஜோ இன்னும் மாறவே இல்ல; மீண்டும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட வீடியோ வைரல்