கமல் மகள் ஸ்ருதியின் 2வது காதலன்... நெருக்கமாக கட்டிப்பிடித்து மனதை புகைய விடும் புகைப்படங்கள்..!

Published : Feb 04, 2021, 04:36 PM IST
கமல் மகள் ஸ்ருதியின் 2வது காதலன்... நெருக்கமாக கட்டிப்பிடித்து மனதை புகைய விடும் புகைப்படங்கள்..!

சுருக்கம்

நடிகர் ஸ்ருதி ஹாசன் தனது 35வது வயதில் இரண்டாவது காதலில் விழுந்து கரைபுரண்டு வருகிறார். 

நடிகர் ஸ்ருதி ஹாசன் தனது 35வது வயதில் இரண்டாவது காதலில் விழுந்து கரைபுரண்டு வருகிறார். ஏற்கனவே இவர் காதல் வலையில் சிக்கியதும், அதிலிருந்து காதல் முறிவு ஏற்பட்டு சில காலம் சினிமாவிலிருந்து விலகியும் இருந்தார். இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்று கூறி இணையத்தில் புகைப்படத்துடன் கூடிய தகவல் கசிந்து வருகிறது.

இந்தப் புகைப்படம் ஜனவரி 28 அன்று ஸ்ருதியின் 35 வது பிறந்தநாள் அன்று பகிரப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில், இந்த ஜோடி ஒருவருக்கொருவர் கட்டி தழுவிக் கொண்டிருக்கின்றனர். அவரது இரண்டாவது காதலர் பெயர் சாந்தானு ஹசாரிகா. ஸ்ருதியின் 35 வது பிறந்தநாளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கெட் டுகெதரில் ஸ்ருதியின் நண்பர்கள், நடிகர் விவான் ஷா மற்றும் இசைக்கலைஞர் கரண் காஞ்சன் ஆகியோர் உடன் இருந்துள்ளனர். இந்த செல்பியில் ஸ்ருதி மற்றும் சாந்தானு இருவரும் வேடிக்கையாக போஸ் கொடுக்கின்றனர்.

ஸ்ருதியை விமான நிலையத்தில் விடுவதற்கு சாந்தானு வந்திருந்தபோது எடுக்கப்பட்ட படம். இருவரும் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு பிறகு அங்கிருந்து வேலையை பார்க்க புறப்பட்டனர். இதற்கு முன்னர் ஸ்ருதி ஹாசன் லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்தார். கடந்த 2019ம் ஆண்டு அவர்கள் பிரிந்துவிட்டார்கள். வேறு வேறு நாட்டில் வசிப்பதால் தான் அவர்களால் காதலை தொடர முடியவில்லை என்று மைக்கேல் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.

ஸ்ருதியின் பிறந்தநாளான இன்று அவர் சலார் படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கே.ஜி.எஃப். படம் புகழ் பிரசாந்த் நீல் தான் சலார் படத்தை இயக்குகிறார். ஸ்ருதி ஹாசன் பிரபாஸுடன் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்தவர், இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் தாலி வாங்கினேன்: நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கம்!
லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....