
கன்னட திரையுலகில் இப்படியொரு பிரம்மாண்டமா? என ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இந்தப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்பட பிரபல கன்னட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். எப்படி தெலுங்கில் வெளியான பாகுபலி திரைப்படம் ஒட்டுமொத்த இந்தியாவையே வியப்பில் ஆழ்த்தியதோடு, பிரபாஸுக்கும் மாஸ் ஓபனிங்காக அமைந்ததோ. அதேபோல் ராக்கிங் ஸ்டார் யஷுக்கு இந்த படம் அமைந்தது.
மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் வெற்றியை அள்ளியது. இதையடுத்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியது. மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் வெற்றியை அள்ளியது. இதையடுத்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியது.
இதையும் படிங்க: லைட்டா தெரியும் இடை... காற்றில் பறக்கும் உடை... அழகு தேவதையாய் ஜொலிக்கும் ப்ரியா பவானி ஷங்கர்...!
கொரோனா பிரச்சனைகளுக்குப் பிறகு கடந்த மாதம் மங்களூருவில் கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்று ராக்கி பாய் யஷ் தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். எனவே அவருக்கு சிறந்த ஃபர்த்டே கிப்டாக கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான சில மணிநேரத்தில் அதற்கு யூடியூபில் 2 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது. குறைந்த நேரத்தில் அதிகம் லைக்ஸ் பெற்ற இந்திய பட டீசர் என்கிற பெருமையை கே.ஜி.எஃப். 2 பெற்றுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.