ஆக்ஷனில் பின்னி பெடல் எடுத்த தளபதி..! வெளியானது மெய் சிலிர்க்கவைக்கும் புதிய புரோமோ..!

Published : Jan 07, 2021, 07:49 PM IST
ஆக்ஷனில் பின்னி பெடல் எடுத்த தளபதி..! வெளியானது மெய் சிலிர்க்கவைக்கும் புதிய புரோமோ..!

சுருக்கம்

சற்று முன்னர் 'மாஸ்டர்' படத்தின் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய புரமோ வீடியோவில் ‘வாத்தி ரெய்டு’ பாடலின் பின்னணியில் தளபதி சும்மா ஆக்ஷனில் பின்னி பெடல் எடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.  

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது. அதன் பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதால் பார்வையாளர்கள் கூட்டம் குறைவாகவே வந்தது. 

இதனால் மாஸ்டர் வெளியீடு தள்ளிப்போன நிலையில், பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனிடையே தமிழக அரசும் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என அறிவித்தது. இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் தினமும் வெளியாகும் புரோமோ வீடியோக்களால் விஜய் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். 

அந்த வகையில் சற்று முன்னர் 'மாஸ்டர்' படத்தின் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய புரமோ வீடியோவில் ‘வாத்தி ரெய்டு’ பாடலின் பின்னணியில் தளபதி சும்மா ஆக்ஷனில் பின்னி பெடல் எடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த புரோமோவை பார்த்த தளபதி ரசிகர்கள், ஒவ்வொரு காட்சியும் புல்லரிக்க வைக்கும் விதத்தில் இருப்பதாகவும், இப்போதே படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாக வெறித்தனம் கட்டி வருகிறார்கள்.

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி
நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!