
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.ஓ படத்தில் வில்லனாக நடித்திருப்பார். இந்தி இயக்குநர் எம்.திவாரி இயக்கத்தில் அக்ஷய் குமார், ஹூமா குரோசி, வாணி கபூர், லாரா தத்தா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பெல்பாட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் 1980ம் ஆண்டு நடந்த விமான கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
முதலில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் படம், நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என அக்ஷய்குமார் உறுதியளித்தார். தற்போது கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்துவிட்டதால் படத்தை ஆகஸ்ட் 19ம் தேதி தியேட்டர்களில் வெளியிட படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் தியேட்டர்களுக்கு வருவதை தவிர்க்கலாம் என்பதால், அவர்களை தியேட்டர்களை நோக்கி கவர்ந்திழுக்கும் விதமாக 3டி-யில் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.
உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த படத்தில் லாரா தாத்தா அச்சு அசலாக இந்திரா காந்தி போலவே தோன்றியுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எந்த நடிகை என்று அடையாளமே தெரியலையே என சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவிற்கு லாரா தத்தா புகைப்படம் வைரலாகி வருகிறது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை கண்முன் காட்டிய மேக்கப் மேனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.