
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் விக்ரம், ஜெய்ராம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, அஸ்வின், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. டெக்னிக் சையிலும் இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவிற்கு ரவிவர்மன், கலைக்கு தோட்டாதரணி என ஜாம்பாவன்கள் டீம் களமிறங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும், இன்னும் அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கியுள்ளதால் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் பிரபல வார இதழில் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் கெட்டப் ஓவியத்துடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டப்பட்டது. இதையடுத்து சோசியல் மீடியாவில் #PonniyinSelvan என்ற ஹேஷ்டேக் காலை முதலே ட்ரெண்டாகி வருகிறது.
பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், ஆழ்வார்க்கடியனாக ஜெயராம் ஆதித்ய கரிகாலனாக சியான் விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா நடிப்பது உறுதியாகியுள்ளது. மணிரத்னத்தின் ஃபேவரைட் ஹீரோயினான ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. பெரிய பழுவேட்டரையருக்கு மனைவியான இந்த கதாபாத்திரம் தான் வில்லியாக செயல்பட்டு ராஜ்ஜியத்தை அழிக்க முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொன்னியின் செல்வன் படம் குறித்து மற்றொரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் சின்ன வயது நந்தினியாக தெயவத் திருமகள் படம் மூலம் பிரபலமான சாரா நடித்து வருகிறாராம். ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், அவருடைய சின்ன வயது கதாபாத்திரமாக சாராவை தேர்வு செய்துள்ளது படக்குழு. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மணிரத்னம் மிகவும் நேர்த்தியுடன் தேர்வு செய்து, வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.