தளபதியின் 'பீஸ்ட்' படத்தில் புதிதாக இணைந்த பிரபலம்..! வைரலாகும் புகைப்படம்..!

By manimegalai aFirst Published Aug 4, 2021, 3:32 PM IST
Highlights

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
 

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன்  திலீப்குமார் இயக்கத்தில்  'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில்,  இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினர். பின்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக பேச்சு அடிபட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பும், சென்னையில் தான் நடந்து வருகிறது.

அவ்வப்போது இந்த படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் புதிதாக பிரபல மலையாள நடிகர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அவர் ஷூட்டிங்கில் இணைந்துள்ளதை உறுதி படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

has Reached Chennai Today. And he will be joining Team for the Shoot in the coming days pic.twitter.com/o8uM7tvzlw

— #BEAST (@MovieBeastOffl)

பல மலையாள படங்களில், நடித்து பிரபலமான  நடிகர் மற்றும் துணை இயக்குனருமான ஷைன் டாம் சாக்கோ என்பவர் தான் தற்போது பீஸ்ட் படத்தில் நடிக்கிறார். ஆனால் இவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. 'பீஸ்ட்' படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்கு தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக கார்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!