பாகுபலியின் வசூலை மிஞ்சுமா எந்திரன் 2.0

Asianet News Tamil  
Published : Jun 15, 2017, 03:52 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
பாகுபலியின் வசூலை மிஞ்சுமா எந்திரன் 2.0

சுருக்கம்

Will Enthiran 2.0 beat the baahubali Collection

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா  வரமாட்டாரா என்ற எதிர்ப்பார்புக்கிடையில் அவர்  நடிப்பில் உருவாகி வரும் ஷங்கரின் பிரமாண்ட படைப்பான '2.0' படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டிங் முற்றிலும் முடிவடைந்து விரைவில் பின்னணி இசைப்பணிதொடங்கவுள்ளது.

 இப்படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் விறுவிறுப்புடன் தொடங்கிவிட்டது. ஏற்கனவே இந்த படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சாட்டிலைட் உரிமையை வாங்க பல தொலைகாட்சி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரூ.110 கோடிக்கு பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரிலீஸ் உரிமையை ஏஏ பிலிம்ஸ் என்ற நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ரூ.80 கோடி கொடுத்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கின்றனர். எனவே கிட்டத்தட்ட இந்த படத்தின் பட்ஜெட்டில் பாதி வருமானம் தற்போது தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தி உரிமையை பெற்றுள்ள ஏஏ பிலிம்ஸ் சமீபத்தில்'பாகுபலி 2' படத்தின் இந்தி ரிலீஸ் உரிமையை பெற்று மிகப்பெரிய லாபத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தி நடிகர் அக்சய் குமார் 2.0 படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் படம் குறித்து வந்த அதிர்ச்சி அப்டேட்! தளபதி ரசிகர்கள் மீண்டும் அப்செட்.!
Thalaivar Thambi Thalaimaiyil Box Office : ஜீவா படம் 5 நாட்களில் வாரிசுருட்டிய வசூல் இத்தனை கோடியா?