
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இதுவரை வெளியான, 'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', மற்றும் 'பிகில்' ஆகிய படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றாலும் சில காட்சிகளை காப்பியடித்து விட்டதாகவும், மற்ற படங்களின் சாயலில் இருப்பதாக இவரை திட்டி வரும் சிலரும் இருந்து கொண்டு தான் உள்ளனர். இதுகுறித்து பிரியா அட்லீயிடம் கேள்வி எழுப்பியதற்கு யாரும் எதிர்பாராத வண்ணத்தில் பதிலளித்து பிரமிக்க வைத்துள்ளார்.
தற்போது அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார். இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் முடிந்து விட்ட நிலையில், இந்த வருடத்தின் இறுதிக்குள் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நயன்தாராவை ஷாருக்கானுக்கு ஹீரோயினாக நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும், அட்லீ மனைவி பிரியா... இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் அட்லீ வெறுப்பாளர்களுக்கு என்ன சொல்ல நிலைகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதற்க்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணமாக, பிரியா பதில் கொடுத்துள்ளார். அதாவது, "எங்கள் மீதும் அதிக அன்பை பொழிவதற்கு நன்றி... அன்பை பரப்புவோம் என தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அட்லீ மற்றும் பிரியா இருவரும் வெறுப்பை காட்டினாலும் அன்பை கொடுப்பதற்கு தயாராக இருப்பவர்கள் என்பது தெரிகிறது. மேலும் இவரது இந்த அணுகு முறையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.