
பிரபல கன்னட இயக்குனர் சூர்யோதே பெரம்பள்ளியின் 20 வயது மகன் மயிர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட இயக்குனர் சூர்யோதே பெரம்பள்ளியின், 20 வயது மகன் மயூர், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு மிகவும் வேகமாக தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீர் டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில்... கால் முழுசா காட்டி சூடேற்றும் தளபதி ஹீரோயின் பூஜா ஹெக்டே..!
சுமார் 300 சிசி வேகத்தில் மயூர் வந்ததால், அவருடைய முன்னாள் வந்த தண்ணீர் டேங்கர் லாரி மீது மோதியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கன்னட திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் சூர்யோதே பெரம்பள்ளிக்கு, கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: 7 வயதில் காமராஜர் முன் பாடிய பிரபலம்..! மறக்க முடியாத தருணத்தின் அரிய புகைப்படம்..!
கன்னட திரைப்படங்கள் மட்டும் இன்றி துளு மொழி படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இயக்கிய சூப்பர் ஹிட் துளு படமான 'Deyi Baidethi - Gejjegiri Nandanodu'-க்கு மூன்று மாநில விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இயக்குனர் சூர்யோதே பெரம்பள்ளி இயக்கத்தில் 'சால்ட்' எனும் கன்னட படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.