ஒரு மில்லியன் ஸ்டேப்லர் பின் வைத்து 'கர்ணன்' தனுஷை வரைந்து சாதனை..! தயாரிப்பாளர் தாணு பாராட்டு..! வீடியோ

Published : Jul 04, 2021, 06:49 PM IST
ஒரு மில்லியன் ஸ்டேப்லர் பின் வைத்து 'கர்ணன்' தனுஷை வரைந்து சாதனை..! தயாரிப்பாளர் தாணு பாராட்டு..! வீடியோ

சுருக்கம்

'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற தனுஷின் போஸ்டரை ஒருவர் ஸ்டேப்லர் பின்னை வைத்து உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இதற்க்கு 'கர்ணன்' பட தயாரிப்பாளர் தாணு தன்னுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.  

'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற தனுஷின் போஸ்டரை ஒருவர் ஸ்டேப்லர் பின்னை வைத்து உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இதற்க்கு 'கர்ணன்' பட தயாரிப்பாளர் தாணு தன்னுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் "கொடியன்குளம்" என்கிற கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் 'அசுரன்' படத்தை தொடர்ந்து, இந்த படத்திலும் தன்னுடைய வெறித்தனமான நடிப்பை தனுஷ் வெளிப்படுத்தி இருந்தார் தனுஷ்.

அதே போல்.. ஒவ்வொரு கதாபாத்திரமும், கர்ணன் வெற்றியின் மகுடத்திற்கு நவரத்தினங்கள் பொருந்தியது போல் பொருத்தமாக இருந்ததாக விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்துள்ளதால், இந்த படத்தின் நாயகி ரஜிஷா விஜயனுக்கு தொடர்ந்து தமிழில் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் வாய்ப்பை கை பற்றியுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை தலை தூக்கியபோது, 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்த போது வந்தாலும், வசூலில் கெத்து காட்டியது. மேலும் 'கர்ணன்' படம் ஓடிடியில் வெளியான போது, பல பிரபலங்கள் படத்தை பார்த்து மனதார புகழ்ந்து தள்ளினார். 'அசுரன்' படத்தை தொடர்ந்து கர்ணன் படத்திற்கும் தனுஷுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சினிமா விமர்சகர்கள் பலர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கர்ணன் படத்தில் தனுஷ் காட்டு பேச்சி முன்பு அமர்ந்திருப்பது போல்... ஓவியர் சீவக வழுதி சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான ஸ்டேப்லர் பின்னால் தனுஷின் ஓவியத்தை வரைந்து சாதனை செய்துள்ளார். இவரது இந்த சாதனை இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்டில் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை தயாரிப்பாளர் தாணு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்ந்து தெரிவித்துள்ளார்.

அதில்... " புதிய புதிய வரலாறுகளை கர்ணன் உருவாக்கிக் கொண்டிருக்கிறான், இன்னும் உருவாக்குவான், இப்படைப்பை வரைந்து சாதனை புரிந்த சீவக வழுதிக்கு என் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். மேலும் இந்த ஓவியம் உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரோகிணியை கடத்தி கதற கதற அடித்தது யார்? முத்து - மீனா மீது விழும் பழி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Today Episode: அண்ணன்களால் அவமானப்பட்ட கோமதி; சரவணனிடம் சிக்கிய மயில்!