
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க கேரள நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது குறித்து, தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிச்சர் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிக்கை மூலம் தன்னுடைய விளக்கத்தை தெரிவித்துள்ளது.
'கைதி' படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யவும், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராஜீவ் ரஞ்சன் என்பவர், தான் கூறிய கதையில் சில மாற்றங்கள் செய்து அப்படியே எடுத்துள்ளதாக கூறி தயாரிப்பு நிறுவனத்திடம் ரூபாய் 4 கோடி கேட்டு கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ததை அடுத்து நீதிமன்றம் இந்த தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாக ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது ... "எங்களது கைதி படத்தை ரீ-மேக் செய்யவும், இரண்டாம் பாகம் உருவாக்கவும் கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக செய்தி, ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதேசமயம் கைதி சம்பந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல் இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் கேட்டுக் கொள்கிறோம்''. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.