தன்னுடைய சின்னசிறு வயதில், கர்ம வீரர் காமராஜர் அவர்கள் முன் பாடி, பாராட்டை பெற்ற தருணத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல நடித்தார்.
தன்னுடைய சின்னசிறு வயதில், கர்ம வீரர் காமராஜர் அவர்கள் முன் பாடி, பாராட்டை பெற்ற தருணத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல நடித்தார்.
தமிழ் சினிமாவில், குணச்சித்திர நடிகர், காமெடியன், இயக்குனர், என அனைவராலும் அறியப்பட்டவர் நடிகர் சின்னி ஜெயந்த். திரையுலகம் சம்பந்தமான டிப்ளமா படிப்பை, படித்து முடித்து விட்டு நடிக்க வாய்ப்பு தேடிய இவர், பிரபல இயக்குனர் மஹேந்திரன் இயங்கிய 'கை கொடுக்கும் கை' படத்தின் மூலம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கினார்.
இதை தொடர்ந்து, பொங்கலோ பொங்கல், கிழக்கு வாசல், காதலர் தினம், கண்ணெதிரே தோன்றினால் என 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் 'உனக்காக மட்டும்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். பல குரலில் பேசி மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாகவும் ரசிகர்களை சிரிக்கவைத்தவர். அதே போல் 'அசத்த போவது யாரு' உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.
'கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன்னுடைய 7 வயதிலேயே கர்ம வீரர் காமராசர் முன்பு பாடல் பாடும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளார். பின்னர் காமராஜர் இவரை சிறந்த கலைஞனாக வருவாய் என பாராட்டியும் உள்ளார். தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், இந்த அரிய புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
7 வயதில் மதிபிற்குரிய திரு. காமராஜ் ்அய்யா முன்பு பாடினேன் நல்ல கலைஞனாய்வருவாய் என்று ஆசிர்வதித்தார் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் pic.twitter.com/YlBDkw9ypF
— chinnijayanthofficial (@chinniofficial)