அம்மா தான் காரணம்! மாடல் அழகியை துடிக்க துடிக்க கொலை செய்த மாணவன் கதறல் வாக்குமூலம்!

Published : Oct 18, 2018, 12:20 PM IST
அம்மா தான் காரணம்! மாடல் அழகியை துடிக்க துடிக்க கொலை செய்த மாணவன் கதறல் வாக்குமூலம்!

சுருக்கம்

கடந்த ஓரிரு தினத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த, 20 வயது மாடல் அழகியை கொலை செய்து, அவரை சூட்கேசில் அடைத்து நடு ரோட்டில் மர்மநபர் யாரோ ஒருவர் வீசி சென்றார்.

கடந்த ஓரிரு தினத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த, 20 வயது மாடல் அழகியை கொலை செய்து, அவரை சூட்கேசில் அடைத்து நடு ரோட்டில் மர்மநபர் யாரோ ஒருவர் வீசி சென்றார்.

அந்த வழியாக வந்த கார் ஓட்டுநர்  இதை பார்த்து விட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, அந்த பெட்டியில் இருந்தது பிரபல மாடல் அழகி என்பதும், அவர்  திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பெட்டியை வீசி சென்றது யார் என அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்த போலீசார்... இந்த கொலையை செய்தது    19 வயது கல்லூரி மாணவர் என கண்டு பிடித்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் அந்த மாணவனிடம் மேற்கொண்ட விசாரணையில் ஏன், கொலை செய்தேன் என அவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்...  "இருவரும் சமூகவலைதளத்தில் அறிமுகமாகி பழகி வந்ததாகவும். இதனால் அந்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு மான்சியை அழைத்ததாகவும் கூறியுள்ளார் சையத் .

வீட்டில் யாரும் இல்லாததால், மான்சியை செக்ஸுக்கு அழைத்ததாகவும்... அவர் மறுத்ததால், கோபவம் வந்தது, இதனால் அவரை பக்கத்தில் இருந்த மர ஸ்டூலை எடுத்து ஓங்கி மண்டையில் அடித்தேன் அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

அவர் கண் வெகு நேரம் ஆகியும் கண் திறக்காததால்... அம்மா வந்தால் என்ன சொல்வது என புரியாமல் கயிற்றால் அவருடைய கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்தேன். பின் அவருடைய பிணத்தை பெரிய சூட்கேசில் வைத்து நடு ரோட்டில் வீசியதாக கூறியுள்ளார்.

மேலும் இப்போது தவறை உணர்ந்து விட்டதாகவும்... செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆத்திரத்தில் அப்படி நடந்து கொண்டதாகவும், குறிப்பாக அம்மாவிற்கு பயந்து மட்டுமே அவரை கொலை செய்யும் வரை துணித்ததாக கதறியபடி போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார் சையத். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!