
தமிழ்ராக்கர்ஸுக்கு எதிராக ‘உங்களை உண்டு இல்லைன்னு பண்ணாம அடுத்த வேளை சோறு உண்ண மாட்டேன்’ என்கிற ஒரு பஞ்ச் டயலாக்கைத் தவிர மீதி எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டார் விஷால்.
ரிசல்ட்...? இன்று காலை வரை மிகப்பெரிய பூஜ்யம்தான். இதோ 65 கோடி பட்ஜெட்டில் மூன்று ஆண்டுகால கடின உழைப்பில் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தும் ‘வட சென்னை’ படத்தை நேற்றே திருட்டுத்தனமாக வெளியிட்டுவிட்டது தமிழ்ராக்கர்ஸ். படங்களை திருட்டுத்தனமாக பிரிண்ட் எடுக்க உதவும் தியேட்டர்களை கட்டம் கட்டியும் விஷால் கோஷ்டியின் பாச்சா பலிக்கவில்லை.
தமிழ்ராக்கர்ஸ் பயல்களுக்கு, மற்றவர்களை விட, வாய்ச்சவடால் மன்னன் விஷால் மீது சற்றே பாசம் அதிகம் என்பதால் அவரது ‘சண்டக்கோழி2’ இன்னும் சில நிமிடங்களில் அதே இணையதளத்தில் வெளியாகும் என்பதை 100 சதவிகிதம் நம்பலாம். அடுத்து மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து கழுத்து நரம்புகள் தெறிக்க சவால் விட்டுவிட்டு அடுத்த படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவார் விஷால்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.