
நடிகர் விஜய் சேதுபதி குறுகிய காலங்களில் 25 படங்களைத் தொட்டுவிட்ட சாதனைக்காக அனைத்து பிரபலங்களும் ஏதோ வேண்டுதல் போல் அவரைப்பற்றி, தங்கள் பங்குக்கு ஆளுக்கு ஒரு எக்ஸ்க்ளூசிவ் செய்தியாக பகிர்ந்து வருகிறார்கள்.
அவர்களுடன், ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதியை ஹீரோவாக தனது ‘தென் மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்திய இயக்குநர் சீனு ராமசாமியும் முக்கியமான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் 'மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 25 படங்கள் கடந்து செல்லும் இவ்வேளையில் அவரை தென்மேற்குப் பருவக்காற்றில் நடிக்க என்னிடம் அழைத்து வந்தவர் நடிகர் ஒளிப்பதிவாளர் திரு.அருள்தாஸ். ஒரு நல்ல நடிகரை என் தேர்வுக்கு அனுப்பிய அவரின் நட்புணர்வுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அடிப்படையில் ஒளிப்பதிவாளரான அருள் தாஸ் சீனுராமசாமியின் அதே ’தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அறிமுகமாகி, கமலின் ‘பாபநாசம்’ ரஜினியின் ‘காலா’ உட்பட சுமார் 50 படங்களில் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.