இடுப்பை கிள்ளிய வித்துவான்! போனோ செஸ்சுக்கு அழைத்த பிரபல நடிகர்! அம்பலப்படுத்திய தொகுப்பாளி!

Published : Oct 17, 2018, 09:11 PM IST
இடுப்பை கிள்ளிய வித்துவான்! போனோ செஸ்சுக்கு அழைத்த பிரபல நடிகர்! அம்பலப்படுத்திய தொகுப்பாளி!

சுருக்கம்

#MeToo இயக்கம் இந்திய அளவில் பெரும் சூடு பிடித்துள்ளது, இந்நிலையில் பெரிய பிரபலங்கள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரையிலும், எங்கோ அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களும் தாங்கள்... ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக சிலரால் எவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானோம் என மீடூ என பதிவிட்டு,  வெளியுலகிற்கு தைரியமாக சொல்ல துணிந்துள்ளனர்.

#MeToo இயக்கம் இந்திய அளவில் பெரும் சூடு பிடித்துள்ளது, இந்நிலையில் பெரிய பிரபலங்கள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரையிலும், எங்கோ அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களும் தாங்கள்... ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக சிலரால் எவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானோம் என மீடூ என பதிவிட்டு, 
வெளியுலகிற்கு தைரியமாக சொல்ல துணிந்துள்ளனர்.

அந்த வகையில் சின்மயின் மூலம் மீடூ ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிரச்னையை, பெண்கள் வெளிக்கொண்டு வருகிறார்கள். இன்றோ தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி தன்னை பிரபல கடம் வித்வான், சக நண்பர்கள் கண் முன்னே, இடுப்பை கிள்ளி சிலுமிஷம் செய்ததாக மீடூ என பதிவிட்டு தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் பிரபல நடிகர் ஜான் விஜய் போனோ செக்ஸ் வைத்துக்கொள்ளுமாறு நடு இரவில் வற்புறுத்தியதாக பதிவிட்டுள்ளார்.

கடந்த 2010  ஆம் ஆண்டு தான் ஸ்ரீரஞ்சனி முதல் முதலாக உமா ஷங்கரை சந்தித்துள்ளார். தன்னுடைய ரேடியோ ஸ்டேஷனுக்கு கெஸ்ட்டாக வந்த உமா ஷங்கர் ஸ்ரீ ரஞ்சனியிடம் போன் நம்பர் வாங்கி, அவ்வப்போது... ஸ்வீட்டி, செல்லம் என மெசேஜ் செய்து எரிச்சல்லூட்டி இருக்கிறார்.

இது நடந்து ஏழு வருடங்கள் சென்றாலும், தற்போது மீடூ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு... வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றே கூறலாம். எப்போதோ நடந்த விஷயத்தை பெண்கள் இப்போது மீடூ மூலம் சொல்ல முன்வந்துள்ளதால்... தற்போது பாலியல் வன்புணர்வு குறித்த விழிப்புணர்வு இளம் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

இவரில் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது உமா ஷங்கர் மட்டும் இல்லை, பிரபல வில்லன் நடிகர் ஜான் விஜய்யும் தான்... உமா ஷங்கர் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் ஒரு படி மேலே போய் அதுவும் நடு இரவில், போனோ செக்ஸ் வைத்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். 

சும்மா விடுவார்களா நம்ப கிளி ஸ்ரீரஞ்சனி... இத்தனை ஆண்டுகள் காத்திருந்து... உண்மையை ஊருக்கே தெரியும் படி உரக்க சொல்லி விட்டார்..!

விட்ட குறை தொட்ட குறையா ஆங்காங்கு வாலாட்டி கொண்டிருக்கும் சில பல விஐபி களுக்கு, துண்டை காணோம் துணியை காணோம் என ஓடும் அளவிற்கு மனதில் கொஞ்சம் பக் பக் வந்துள்ளது. எந்த நேரத்தில் நம்முடைய பெயரும் மீடூ ஹாஷ்டாகில் இடம்பெற்று விடுமோ என தங்களது நண்பர்களுடன் ஒரு சில விஐபிகள் கிசுகிசுப்பதை கேட்க முடிவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!
Super Singer Winner: இசை உலகை ஆளப்போகும் அந்த குரல்! இன்று வெளிச்சத்திற்கு வரும் சூப்பர் சிங்கர் வின்னர்!