ஓட்டுக்காக வேடம் போடும் கமல் என் படத்தை விமர்சிப்பதா?’ ‘ஜெயலலிதா’அயர்ன்லேடி பட இயக்குநர் காட்டம்!

By vinoth kumarFirst Published Oct 17, 2018, 5:37 PM IST
Highlights

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து நான் இயக்கவிருக்கும் படம் தொடர்பாக கருத்து கூறும் அருகதை கமல்ஹாசனுக்கு இல்லை’ என்று பெண் இயக்குநர் காட்டமாக விமர்சித்துள்ளார். 

’முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து நான் இயக்கவிருக்கும் படம் தொடர்பாக கருத்து கூறும் அருகதை கமல்ஹாசனுக்கு இல்லை’ என்று பெண் இயக்குநர் காட்டமாக விமர்சித்துள்ளார். 

மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குனர் பிரியதர்ஷினி முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘த அயர்ன் லேடி’ என்ற பெயரில் படமாக்கும் முயற்சியில் உள்ளார். படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க சசிகலா வேடத்துக்கு முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸால்  வெளியிடப்பட்டது விரைவில் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே கமல்ஹாசனிடம் இந்த பட முயற்சி பற்றி கேட்டதற்கு அவர் ’இந்த படம் ஒருதலைப்பட்சமானது’ என்று விமர்சித்தார். இதை குறிப்பிட்டு கமல் ஹாசனை தாக்கிப்பேசிய  இயக்குனர் பிரியதர்ஷினி  கமலைப் போலவே அதிகம் புரியாதபடி ஒரு ட்விட் பதிலடி கொடுத்தார். 

‘த அயர்ன் லேடி’ படத்தை ஒருதலைபட்சமானது என்று விமர்சித்த கமல்ஹாசனுக்கு, மக்கள் எழுச்சி என்பார், மாணவர் புரட்சி என்பார், ஊர்கூடி தேர் இழுப்போம் என்று இவர் தம் நோக்கம் அறியா மக்களை மய்யமாக கொண்டு பேசுவார். 

ஆனால் பல ஆண்டுகளுக்கு பின்பு புரட்சியை எல்லாம் தள்ளிவிட்டு ஓட்டு வங்கிக்காகவும், சுயநலத்தோடும் பல ஆண்டுகளுக்கு பின்பு ’தேவர் மகன் 2’ எடுத்து கொண்டாட இருக்கிறார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வாரா?. உண்மை போல் தோற்றம் அளிக்கும், வே‌ஷம் போடும் மனிதர்களை நிந்தை செய்’இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

click me!