
பிக்பாஸ் அல்டிமேட் :
பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெல்லாம் பேமஸ் ஆனா ரியாலிட்டி ஷோ. தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்கிற பெயரில் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் இந்நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இறுதி போட்டியாளர்கள் :
இறுதியாக 6 இருந்த பேரில் அபிராமி ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டார். இதையடுத்து ஜூலியும் இரவோடு இரவாக வெளியேறினார். பின்னர் இந்நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப், பாலா ஆகிய 4 போட்டியாளர்கள் இருந்தனர்.அவர்களில் ரம்யா பாண்டியன், நிரூப், பாலா ஆகிய 3 பேர் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...பீஸ்ட் ரெடி..அப்போ தலைவர் 169 எப்போ? இயக்குனரின் தடாலடி பதில்..
விருந்தினர்கள் என்ட்ரி :
முன்னதாக எலிமினேட் செய்யப்பட்ட ஹவுஸ்மேட்ஸ் மீண்டும் வந்த நிலையில் அவர்களோடு பிரியங்கா, பாவனி, முகென் ராவ் ஆகியோர் சில தினங்களுக்கு முன் வந்தனர். அடுத்ததாக கடந்த சீசன் டைட்டில் வின்னர் ராஜு, இரண்டாவது சீசன் டைட்டில் வின்னர் ரித்விகா இதுதவிர நடிகை யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர் அவர்கள் அனைவரும் ஸ்பெஷல் டான்ஸ் பர்பார்மன்ஸ் கொடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...ரஜினியின் அண்ணாத்தே சாதனையை முறியடித்த பீஸ்ட்...யுஎஸ்ஏ வசூல் எவ்வளவு தெரியுமா?
டைட்டில் வின்னர் :
70 நாட்கள் காத்திருப்புக்கு பின்னர் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்லப்போவது யார் என்பது குறித்து இன்று முடிவாக உள்ளது. மற்ற போட்டியாளர்களை விட பாலா ரசிகர்களின் மனதை வென்றவர். அதாவது 4-வது சீசனில் இறுதிவரை வந்த பாலாவுக்கு 2-ம் இடம் கிடைத்த. எனவே இந்த முறையும் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல பாலாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.