Gp muthu: பிக் பாஸில் ஜி. பி. முத்து...தாமரையை பற்றி புகழாரம்..? வெளியான புதிய வீடியோவால் பரபரப்பு..!

Anija Kannan   | Asianet News
Published : Apr 10, 2022, 03:31 PM IST
Gp muthu: பிக் பாஸில் ஜி. பி. முத்து...தாமரையை பற்றி புகழாரம்..? வெளியான புதிய வீடியோவால் பரபரப்பு..!

சுருக்கம்

Gp muthu: 'டிக் டாக்' பிரபலம் ஜி. பி. முத்து அடுத்த பிக் பாஸ் போகலாமா? என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

'டிக் டாக்' பிரபலம் ஜி. பி. முத்து அடுத்த பிக் பாஸ் போகலாமா? என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்படும் பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில், கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.  

பிக்பாஸ் அல்டிமேட்டில் யார் வெற்றியாளர்?

இதில், 14 போட்டியாளர்களுடன் 70 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில்,  பிக் பாஸ் பைனலுக்கு  6 போட்டியாளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனிடையே இந்த இறுதி வரை தாக்கு பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களான ஜூலி மற்றும் அபிராமி இருவரும் பாதியிலே வெளியேறினர். இந்நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப், பாலா ஆகிய 4 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் அதிக வாக்குகளை பெற்று வின்னராக பாலா அறிவிக்கப்பட்டுள்ளார்.   

வீட்டிற்குள் சென்ற சிம்புவின் முன்னாள் காதலி?

ஏற்கனவே பிரியங்கா, பாவனி,ஆகியோர் சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற நிலையில், இதையடுத்து,  முகென் ராவ் சிம்புவின் முன்னாள் காதலி ஹன்சிகா ஆகியோர் நேற்று உள்ளே சென்று விட்டு வந்தனர். மேலும், கடந்த சீசன் டைட்டில் வின்னர் ராஜு, இரண்டாவது சீசன் டைட்டில் வின்னர் ரித்விகா ஆகியோரும் இந்நிகழ்ச்சியின் பைனல்ஸில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜி. பி. முத்து வெளியிட்டுள்ள வீடியோ:

இந்நிலையில், 'டிக் டாக்' பிரபலம் ஜி. பி. முத்து அடுத்த பிக் பாஸ் போகலாமா? என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னை எல்லோரும் பிக் பாஸ் போக சொல்கிறார்கள். ஆனால், என்னால் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது. எனக்கு தாமரையை ரொம்ப பிடிக்கும். மேலும், பிக்பாஸ் வீட்டில் சண்டை நடக்கிறது. முத்தம் கொடுக்கிறார்கள். கட்டிப்பிடிக்கிறார்கள்'' என்று கூறிய அவர் தனக்கு பிக் பாஸ் பிடித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

அந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், தலைவரே நீங்க bigg boss போனிஙனா நீங்க தான் TITLE WINNER என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். எனவே, ஜி. பி. முத்து அடுத்த பிக் பாஸில் என்ட்ரி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

மேலும் படிக்க ....நள்ளிரவில் பீஸ்ட் பட பேனரை அகற்றிய போலீஸ்..! கடுப்பான விஜய் ரசிகர்கள், போலீஸாருடன் கடும் வாக்குவாதம்! வீடியோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!