
ஹாட்ஸ்டார் ஓடிடிக்காக நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை முதல் 3 வாரத்திற்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின்னர் படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் இருந்ததன் காரணமாக அவர் பாதியில் விலகியதால், அவருக்கு பதில் சிம்புவை தொகுப்பாளராக களமிறக்கியது பிக்பாஸ் குழு.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முதன்முறையாக நடத்தப்படுவதால் இதனை பிரபலப்படுத்தும் விதமாக முந்தைய சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களை களமிறக்கின்றனர். அதன்படி பாலா, நிரூப், சுருதி, அபிநய், வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, தாடி பாலாஜி, சினேகன், சுஜா வருணி, தாமரைச் செல்வி, ஷாரிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் பாதியிலேயே வெளியேறியதால், அவர்களுக்கு பதில் கலக்கப்போவது யாரு சதீஷ், நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். வழக்கம் போல் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்த இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. பிக்பாஸ் டைட்டிலை வெல்ல ரம்யா பாண்டியன், தாமரை, நிரூப், பாலா ஆகிய 4 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் பாலா ஜெயிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் முதன்முறையாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சிம்பு, போட்டியாளர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படியுங்கள்.... Beast Review : விஜய்யின் நடிப்பும்... நெல்சனின் திரைக்கதையும் அல்டிமேட் - பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனம் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.