அட்ரா மாடனாக ஹவுஷ்மேட்ஸ்...இன்று மாலை காத்திருக்கும் சர்ப்ரைஸ்...

Kanmani P   | Asianet News
Published : Apr 10, 2022, 02:36 PM IST
அட்ரா மாடனாக ஹவுஷ்மேட்ஸ்...இன்று மாலை காத்திருக்கும் சர்ப்ரைஸ்...

சுருக்கம்

பிக்பாஸ் அல்டிமேட் இன்று பைனல்ஸ் நெருங்கியுள்ளது. இதற்காக மீதமுள்ள போட்டியாளர்கள் கலக்கலாக ரெடியாகியுள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது.

புதிய வடிவில் பிக்பாஸ் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல்டிமேட் என்னும் பெயரில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படுகிறது. 14 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சி 4 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்கிடையே வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம்  சுரேஷ் சக்ரவர்த்தி, கேபிஒய் சதீஸ், விஜய் டிவி புகழ் தீனா, சண்டி மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் வந்தனர்.  

வெளியில் சென்ற போட்டியாளர்கள் :

தொகுப்பாளராக இருந்த கமல் விலகியதை அடுத்து வனிதா தானாகவே வெளியில் சென்றுவிட்டார். இவரை அடுத்து உடல் நிலை கோளாறு காரணமாக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியில் சென்றுவிட்டார். அதோடு வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தவர்களில் ரம்யா பாண்டியனை தவிர மற்ற அனைவரும் எலிமினேட் ஆனார்கள். பின்னர் அபிராமி வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து ஜூலியும் அனுப்பப்பட்டார். 

15 லட்சத்துடன் சென்ற சுருதி :

முதலில் 3 லட்சத்துடன் அல்டிமேட் ஹவுஸுக்குள் வந்த பணப்பெட்டியில் மதிப்பு பின்னர் 15 லட்சமாக உயர்த்தப்பட்டது.  இதற்கான டாஸ்கில் சுருதி - ஜூலி இருவரும் கடும் போட்டியிட்டு பின்னர்  சுருதி வெற்றி பெற்று 15 லட்சத்துடன் வெளியேறிவிட்டார். 

கெஸ்ட் வருகை :

ஏற்கனவே எலிமினேட்  செய்யப்பட்ட போட்டியாளர்க ளோடு  பிரியங்கா, பாவனி உள்ளிட்டோர் வந்துள்ளனர். அதோடு நேற்று சீசன் 3 வின்னர் முகின் ராவ் அல்மேட் வீட்டிற்குள் வந்துள்ளார்.  இவரை வரவேற்ற பிக்பாஸ் எந்த வெற்றியாளரை வெளியில் இவர் நேற்றே போட்டியாளரை அழைத்து செல்வார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர்.

இன்று பைனல்ஸ் :

பிக்பாஸ் அல்டிமேட் இறுதி சுற்று இன்று இதற்காக அல்ட்ரா மாடர்னாக போட்டியாளர்கள் ரெடியாகியுள்ளனர். தாமரை, நிரூப்,பாலாஜி, ரம்யா பாண்டியன் வேற லெவலில் ரெடியாகியுள்ளனர். இந்த ப்ரோமோ தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!