Bigg Boss 5 Tamil : பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான்...? லீக்கான புது அப்டேட்..!!

Published : Jan 14, 2022, 09:39 AM IST
Bigg Boss 5 Tamil : பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான்...? லீக்கான புது அப்டேட்..!!

சுருக்கம்

பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் வின்னர் யாராக இருக்கும் ? என்ற புது தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை கடந்துள்ள நிலையில், அடுத்த வாரம் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது. 18 போட்டியாளர்களுடன் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த இருவருடன் சேர்த்து மொத்தம் 20 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ரசிகர்கள் அளிக்கு வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது பிரியங்கா, ராஜூ, பாவனி, அமீர், நிரூப் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த ஐந்துபேரில் யார் சாம்பியன் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ஏற்பட்டுள்ள நிலையில், இறுதிவாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பிரம்மாண்டமாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற விருக்கிறது. டிக்கெட் டு ஃபினாலேவை வென்று முதல் நபராக பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே வாரத்திற்குள் நுழைந்த அமீர் தான் கிராண்ட் ஃபினாலே அன்று முதல் நபராக எவிக்ட் ஆகி வெளியே வரப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. 4வது இடத்தை  நிரூப்பும், 3வது இடத்தில் பாவனியும் பிடிக்க வாய்ப்பு உண்டு என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் மக்கள் ஓட்டுக்களுடன் முதல் நபராக சேவ் ஆகி வரும் ராஜு இந்த சீசனின் டைட்டிலை தட்டித் தூக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியின் ஆங்கரான பிரியங்கா ரன்னர் - அப் ஆக தேர்வு செய்ய அதிக வாய்ப்பு என்று கூறுகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் ராஜூவுக்கே அதிக ஆதரவு இருப்பதால், அவரே பிக் பாஸ் டைட்டில் வெல்வார் என்று மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!