Maaran Motion poster : மாறன் மாஸ் அப்டேட்.. தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பொங்கல் விருந்து..

By Kanmani P  |  First Published Jan 13, 2022, 6:46 PM IST

Maaran Motion poster : மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

எனவே இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. தன்னுடைய திறமையை நடிப்போடு நிறுத்தி கொள்ளாமல்... நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார். 

Latest Videos

தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன்  படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்படம் இதுவாகும்.

undefined

மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

 

click me!